17 Aug 2010

ஈங்ங்கங்ங்கிகி.....அஆஆ...அப்பா



வேலை வன்ம பளு
தனிமை உளி விரக்தி
கருத்தரிக்க பிரசவம் கிறுக்கல்
திங்கள் வெள்ளி இருள்
சனி விடியல் என்அகம்
பத்தும் எட்டும் சேர
“ஈங்ங்கங்ங்கிகி.....அஆஆ...அப்பா”
மழலை மொழி எனை
பெற்றெடுக்க
யாழ்முகம்...

12 comments:

KUTTI said...

அற்புதம் வினோ சார்.

வாழ்த்துக்கள்.

மனோ

சிவாஜி சங்கர் said...

Nalla irukku nnaa.. Naanum thedugiren...
En piriyangalai..

Unknown said...

மழலைச்சொல் கேட்ட தகப்பனின் புளகாங்கிதம்...

Anonymous said...

குழந்தையின் மழலை அருமை வினோ!
//பத்தும் எட்டும் சேர//
விளக்கம் ப்ளீஸ் நண்பா!

பாலா said...

ஔவையின் வாக்காய் திரைகடலோடிய பயணம்

பசலையோடிய மனையாளின் ஏக்கம்

ஆங்கில வசவுகளின் தாக்கம்

கண்முன் நிழலாடும் நிலையற்ற எதிர்காலம்

பணத்தின் தேவையை அதிகப்படுத்தும் சொகுசு விளம்பரங்கள்

நலம் விசாரிக்கும் மனைவியின் தொலைக்குரலினுடே

"ப்ப" மொழிபயிலும் மகனின் மழலை சொல்

எவனோ சொன்னான் இசையின் உச்சம் கண்ணீராம் !

என் கன்னங்களில் நீர் கோடுகள் !

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


இது என்னோட பழைய கிறுக்கல்கள் நண்பா,

ஜில்தண்ணி said...

தங்கள் மழலையை ரசித்து எழுதியிருக்கிறீர்

நானும் அவ்வனே ரசித்தேன் :)

வினோ said...

நன்றி மனோ...

வினோ said...

thanks Siva.. u will get them very soon

வினோ said...

ஆமாம் செந்தில் அண்ணே... ஒரு நாள் தான் வாரத்தில்...

வினோ said...

பாலாஜி - பத்தும் + எட்டும் = பதினெட்டு...

வினோ said...

பாலா நன்றி நல்ல கவிதை...

வினோ said...

ரசித்ததற்கு நன்றி ஜில்லு...