14 Aug 2010

ஒற்றைப் புள்ளி கோலம்பதிவுலகில் நான் என்னும் தொடர் பதிவிற்கு என்னை அழைத்த நண்பர் கமலேஷ்க்கு நன்றி.
 
1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

வினோத்

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

வினோத் தாங்க உண்மையான பெயர்.

3.
நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?

எதிர்பார்ப்பின் ஏமாற்றங்களும்
என் தனிமை தனிமையை உணர்ந்த தருணங்களும்
பிரசவம் பார்த்த கிறுக்கல்களை
நிலவின் மடியில் சேமித்து வைக்க

4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?


இந்து மாகடலில்
ஒரு துளியை விதைத்திருக்கிறேன்..
அறுவடையில் தெரியும்...

போங்க அண்ணே... பிரபலமா .. அப்படினா ?

5.
வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
 
நினைவுகள் நித்திரைகளை
கொணர்ந்த பொழுதுகளில்
கிள்ளி எடுத்து துள்ளி குதிப்பது
கிறுக்கல்களே.... 

காரணம்:
என்றேனும் திரும்ப
என்னை கைப்பிடித்து
அழைத்துப் போக
வாழும் என் சுவாசங்களுக்காய்....
 
6.
நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
 

இரைந்து விட்டு தலை கவிழ...
இழந்து விட்டு மனம் குமற..
திரும்ப தொடுக்கும்
கேள்விகளுக்கு மட்டுமே...

சம்பதிப்பதெல்லாம் நட்பின் உறவுகளே....

7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு? 

ஒற்றைப் புள்ளி கோலம் போட்டு
அழகு பார்த்துக்கொண்டிருக்கிறேன்  

8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

இரண்டும் இல்லை..

ஆனால் பலரின் படைப்புகளிலிருந்து மீளமுடியாமல் தவித்திருக்கிறேன்...
 

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?

என்னை எழுத தூண்டியவர் தம்பி சிவாஜி

முதல் பின்னூட்டத்தின் மூலம் கைகுலுக்கியவர் – என் நண்பர் உதய்...

என் எழுத்துகளையும், என்னையும் அறிமுகபடுத்தியவர் KRP செந்தில் அண்ணன்

நேரில் பாராட்டியது எனது தோழி....  

10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் கூறுங்கள்.

பல எழுத்துக்களின் வாசகனாய் –என்
எழுத்துகளின் விமர்சகனாய்...
பதிவுலகத்தில் ஒரு அழகிய சருகாய்...
நட்பின் வாசனையாய்
பூக்குவே ஆசை...

இத்தொடர் கோலத்தில் இன்னும் கொஞ்சம் அழகு சேர்க்க நாடும் நேசக்கரங்கள்

MANO      

15 comments:

வெறும்பய said...

பதில்கள் மிகவும் அருமை நண்பரே....

பதில்கள் அனைத்தும் கவிதை நயமாகவே இருக்கிறது...

வாழ்த்துக்கள்...

வெறும்பய said...

என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

ஜெய் ஹிந்த்!

வினோ said...

@ வெறும்பய - நன்றி நண்பரே...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

என்ன வெறும் பதில கேட்டா கவித கவிதயாவே வந்தருக்கே

//// ஒற்றை புள்ளி கோலம்,இந்துமாக் கடல்,நிலவின் ////

இப்படியும் பதில் சொல்ல முடியுமா,அட அட

அட நம்ம மனோவையும் மாட்டி விட்டுட்டீங்களா,ரைட்டு :)

MANO said...

நட்பின் வினோ,

இன்றுதான் நீங்கள் தொடர் பதிவுக்கு INVITE செய்ததை பார்த்தேன். இன்றே பதிவும் போட்டு விட்டேன்.

நன்றி.

மனோ

கமலேஷ் said...

ஒத்தப் புள்ளி கோலம் -

அழகான வரி.

ரொம்ப நல்லா இருக்கு நண்பரே.

sakthi said...

கவித்துவமான பதில்கள் வினோ

நன்று

Sivaji Sankar said...

Anne, romba santhoshama irukku. :-)
unmayile neenga periya anubava saali..
Nalla thodar thervugal..
Vazhthukal.
Ungalukkum nanbargalukkum..

வினோ said...

வாங்க ஜில்லு.. கொஞ்சம் மாற்றி எழுதலான்னு தான்..

வினோ said...

நன்றி மனோ

வினோ said...

மிக்க நன்றி கமலேஷ்..

வினோ said...

நன்றி sakthi...

வினோ said...

மிக்க நன்றி தம்பி சிவா..

Jayaseelan said...

முதல்ல கைய கொடுங்க நண்பா... பதில்களெல்லாம் கலக்கல்... என்னை அழைத்ததற்கு நன்றி...

வினோ said...

@ Jayaseelan - வாங்க. வந்தமைக்கும் பின்னுட்டதிற்க்கும் மிக்க நன்றி...