KRP அண்ணனிடம் நண்பர்கள் தின வாழ்த்துக் கவிதை ஒன்று கேட்டிருந்தேன்... அவர் அனுப்பி வைத்த கவிதை உங்களுக்காய் அவர் அனுமதியுடன்...
----------------------------------------------------------------------
சிறு பிள்ளை விளையாட்டென
பள்ளிக் காலங்களில் தொடங்கும் நட்பில்
இன்றைக்கும் நினைவுகளில்
நட்பின் குறும்புகள்...
ஆறாம் வகுப்புக்கு முன்
சின்ன பள்ளிக் கூடம்..
அதற்கு மேல் பனிரெண்டு வரை
பெரிய பள்ளிக் கூடம்..
நட்பில் ஒரே பள்ளிதான் எப்போதும்..
பனிரெண்டு வரை படித்தவர்களில்
அத்தனை பேரும் தொடர்பில்லை ..
ஆனால் இத்தனைக் காலமும்
கூட வரும் சில உயிர் நட்பு...
காதலை யாவரும் முதலில்
பகிர்வது நட்பிடமே,
அதனை சுமந்து திரிவதும் நட்புகளே..
பாதைகள் தடம் மாற
பிடித்து இழுத்து பயணங்களை தீர்மானிக்கும்
நட்புகள்
வாழ்வின் அற்புதம்..
என் துயரம்
என் சந்தோசம்
என் உயர்வு
என் தாழ்வென
நட்பின் தீர்மானங்களில் நான்...
சில குறைகள்
சிலர் எதிரிகள்
ஆனாலும் என் நண்பர்கள் இருப்பதாலேயே
சந்தோசமாக இருக்கிறேன்
நான்..
--------------------------------------------------------------
KRP அண்ணனுக்கு எனது நன்றிகள்....
9 comments:
அருமையான வரிகள் நண்பா...
எழுதிய KRP அண்ணனுக்கு வாழ்த்துக்கள்...
நண்பா - உன் விடா முயற்சியை பாராட்டுகிறேன், உன் எல்லா பதிவுகளும் பிரபலம் ஆகவும், நீ ஒரு பிரபல பதிவர் ஆகவும் வாழ்த்துகிறேன்.
நன்றி நண்பர்களே...
விநோ...இப்போ நாங்களும் உங்கள் நண்பர்கள்தான்.காற்றில் கையசைத்து பதிவுகளோடு உலா வருவோம்.அன்பு வாழ்த்துகள் உங்களுக்கு.
கவிதை நல்லாருக்கு..
@ ஹேமா - வாங்க தோழி.. உங்கள் தோழமைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி...
@ Riyas - வாங்க நண்பரே... மிக்க நன்றி..
காதலை யாவரும் முதலில்
பகிர்வது நட்பிடமே,
அதனை சுமந்து திரிவதும் நட்புகளே..
கவிதை நல்லாருக்கு நண்பா
@ Sakthi - வாங்க சகோ... முதல் வருகைக்கு நன்றி... வாழ்த்துக்களுக்கும் நன்றி...
மிகவும் நன்றி தம்பி.. அனைவருக்கும் என் நண்பர் தின வாழ்த்துக்கள்..
Post a Comment