இது அல்ல அது
அணியும் ஆசைகளில்
மாறிய ஆடைகள்
உடல்தழுவ ஒளிரும்
அவள்
விரல்பட்ட கோலங்கள்
ஏக்கங்கள் தேங்கியப் பக்கங்களில்
காத்திருத்து கரைகிறது
என் விழிஇரு துருவங்கள்
உரவாடிய நிலவு விட்டுச்செல்கிறது
அவள்
இரவுகளில் நீச்சம்பெற்றக் கனவுகள்
இதயங்கள் தைத்த
ஒற்றையடிப் பாதையில்
பயணிக்கிறது நினைவுகள்
சற்றே
இளைப்பாறும் இமைகளுக்குள்
அவள்
இமை திறந்து நகைக்கிறாள்
நுனி மூக்கை நழுவி
தெறிக்கிறது
மழையின் துளிகள்
ஈரத்தின் வாசனைகளில்
அவள்
இதழ் பதிப்பின் ஸ்பரிசங்கள்
என்றாவது கடக்கும்
கவிதையெனும்
நேசத்தின் மறுமொழிகள்
மூழ்கிப்போகும் தருணங்களில்
அவள்
என்விரல் பிடித்துத்திருத்திய கொம்புசுளிகள்
ஆதி முதல் அந்தம் வரை
ஜனனிக்கும்
இறப்புக்கும் பிறப்புக்கும்
நடுவில்
துடிக்கும் உயிரின் நாடியாய்
அவள்
களவாடிய பொழுதுகள்....
7 comments:
அவள் களவாடிய பொழுதுகளை கலைக்காமல் கவனமாய் கூறிய விதம் அருமை நண்பரே..
வாழ்த்துக்கள்..
நன்றி வெறும்பய... நலமா?
Thanks Sweatha Sanjana
களவும் கொடுத்துவிட்டுச் சந்தோஷப்பட்டுக் கவிதை எழுதுவது காதலில் மட்டும்தான் விநோ !
ஹேமா மிக்க நன்றி... எப்படி இருக்கிறீங்க ?
ரொம்ப நல்லாருக்கு வினோ!
//என்றாவது கடக்கும்
கவிதையெனும்
நேசத்தின் மறுமொழிகள்
மூழ்கிப்போகும் தருணங்களில்
அவள்
என்விரல் பிடித்துத்திருத்திய கொம்புசுளிகள்//
அற்புதம்..
வாங்க பா ரா அண்ணே... மிக்க நன்றி அண்ணே வந்தமைக்கும் பின்னுட்டத்திற்க்கும்...
Post a Comment