31 Aug 2010

கடலோர நடைப் பயணம்


நீல மங்கை கைகோர்த்து நடந்து பழக கற்றுக்கொடுத்து, கூட நடந்த தருணங்கள்.. இவையே இனி...

இங்கிருந்து (Belfast) சுமார் 20 கீ.மீ. தூரம் போனால் ஒரு சின்ன தீவு மாதிரியான ஊரு (Bangor). அங்கே தாங்க இந்த நடைப்பயணம்.. Bangor பற்றி  அடுத்த  பத்தியில் பார்ப்போம். .. 

இப்போ அங்கே போன அனுபவத்தை.. 

திங்கள் காலை சுமார் 10.30 மணிக்கு புகை வண்டிப் பிடித்தோம்.. 

ஒரு மணி நேர பயணம். நம்ம ஊரு பேரூந்து மாதிரி, வண்டியில்  ஏறிய  பின் தான் பயணச்சீட்டு வாங்க முடியும். ஏன்னா இங்கே  ஏறிய  நிலையத்தில் யாரும் இருக்க மாட்டாங்க. ஏதும் இல்லை நடைமேடைத் தவிர. ஒரு நாள் பயணச்சீட்டு வாங்கிட்டு வண்டியில் அமர்ந்தோம்.. என்ன அருமையான வண்டி… நம்ம ஊரு மூன்றாம்  ஏ சி கூட இப்படி இல்லைங்க. சுத்தம், பஞ்சு இருக்கைகள், சத்தம் இல்லா , ஆட்டம் இல்லா பயணம்.. அப்படியே இயற்கையை ரசிச்சிக்கிட்டுப் போனோம்.. வழிமுழுவதும்  கடலோரமா  தான் போனது வண்டி.   

Bangor ஒரு சின்ன தீவு மாதிரியான ஊர். சொகுசு படகுகள் வாங்கி விடுமுறைகளை பொழுது கழிக்கும் மக்களும், அவர்களின் படகுகளும் காலம் போக்கும் இடம். அழகிய இடம்..

Bangorல் இருந்து ஒரு 6கீ.மீ. கடலோர சுத்தமான நடைபாதை, எந்த சத்தமும்   இல்லை, கடலின்  இசையைத் தவிர.. 

காலையில சரியா சாப்பிடலை.. அதனால கொஞ்சமா ( ஒரு முழு ப்ரைய்டு கோழி, 18 சிப்ஸ் பாக்கெட்ஸ், இப்படி ஒரு 2000 ரூபாய்க்கு) சாப்பிட வாங்கிட்டு நடக்க ஆரம்பிச்சோம்... 

நகரத் தன்மையிருக்கிற இடங்களைத் தாண்டி பாதையை பிடிச்சு தனிமை நிறைந்த நிழல் கிடைக்கவும், கோழி கூவுறது கேட்க, சாப்பிட அமர்ந்தோம். வாங்கிட்டு வந்ததுல பாதியை காலிப் பண்ணிட்டு, திரும்பவும் நடக்க ஆரம்பித்தோம். 

இங்க நம்ம நண்பர்  சூரியன்  பற்றியும் சொல்லணும். அவருக்கு என்ன  தோணிச்சோ, மக்க நாள் முழூவதும்  எங்களுக்கு  உடம்பு  சுடாத  தரிசனம்  தந்தாரு. அதனால
வருண  பகவானுக்கு Holiday. 

பல வகை படகுகள் வளம் வருவதை  பார்க்கும் அழகே அழகு. கால் நனைக்கும் வயதான மனிதர்கள், துள்ளி  குதிக்கும்  இரண்டு  வயது  குட்டி  பாப்பா, தனிமை விரூம்பிகள், காதல் கதை பேசும் ஜோடிகள், தன் குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண், துடுப்பு படகு ஓட்டும் சின்ன பெண், அவளை ஆர்வத்துடன் பார்க்கும் அப்பா, கொஞ்சம் கவலையுடன் பார்க்கும் அம்மான்னு, இப்படிப் பல காட்சிகளுடன், பல தரப்பட்ட  முகங்களுடன்  எங்கள் நடை..... 

இதுல ஒரு விஷேசம்... அனைவரும்  வணக்கமும், புன்னகையும்  நமக்கு  தந்து விட்டுத் தான் போவார்கள்.. எத்தனை எத்தனை புன்னகைகள். இதுவல்லவோ எங்கள் சத்து 6 கீ.மீ. நடைக்கு.. 
இன்னொரு விஷயம்.. எத்தனை  விதமான  மனிதர்களைப்  பார்க்க  முடிகிறதோ, அத்தனை விதமான செல்ல  பிராணிகளையும்  பார்க்கலாம்..  அனைத்தும் நல்ல பயிற்சி பெற்றவை.. (எதுவும்  செய்யல எங்களை). 

வசீகரம்  குறையா  கன்னிப்  பாவையின் அத்தனை நளினங்களும் தந்தாள்  இந்த  நீல மங்கை எங்கள் நடை  பயணத்தில்..   
வளைந்து, நெளிந்து, நின்று, நிமிர்ந்து, ஏறி, இறங்கி, குலுங்கி, குறுகி, இப்படி பலப் பல நளினங்கள்.. எங்களுக்கு விருந்து  படைத்தாள்   தண்ணீர் அரசி ..              

ஆட்டம், பாட்டம், ஓட்டம், நடை, களைப்பு, தூக்கம், சிரிப்பு, கைதட்டல் இப்படி மாறி மாறி பொழிந்த வண்ணம் தொடர்ந்தது எங்கள் பயணம்..

29 comments:

Anonymous said...

அருமையான நடை..
படங்கள் சூப்பர்ப்!

//தண்ணீர் அரசி .. //

வினோ டச் :)

Chitra said...

Super photos and write-up!

ஜெயந்த் கிருஷ்ணா said...

நண்பா அருமையான எழுத்து நடை உங்களுக்கே உரிய கவிதை கண்களுடன்... படங்களும் கண்ணுக்கு குளிர்ச்சியாக...

KUTTI said...

நட்பின் வினோ

அழகான கவிதையாக தொடங்கியுள்ளது உங்கள் பயனத் தொடர்.

மனோ

Ahamed irshad said...

good Article..

sathishsangkavi.blogspot.com said...

வினோ...

அழகான படங்கள்.... இந்த இடத்தை நேரில் பார்த்த உணர்வு உங்க எழுத்தில்

செல்வா said...

///காலையில சரியா சாப்பிடலை.. அதனால கொஞ்சமா ( ஒரு முழு ப்ரைய்டு கோழி, 18 சிப்ஸ் பாக்கெட்ஸ், இப்படி ஒரு 2000 ரூபாய்க்கு) சாப்பிட வாங்கிட்டுநடக்க ஆரம்பிச்சோம்... ///
அட பாவமே ..?!?
அருமையா எழுதிருக்கீங்க .. நீங்க சொன்னா இடத்த நேர்ல பார்த்த மாதிரியே இருக்கு . இன்னும் எழுதுங்க ..

VELU.G said...

நல்லாயிருக்குங்க உங்க எழுத்து

வாழ்த்துக்கள்

வினோ said...

நமக்கேல்லாம் அரசி தானே கடல் பாலாஜி.. நன்றி நண்பா

வினோ said...

Thanks Chitra Sis...

வினோ said...

இன்னும் படங்கள் இருக்கு ஜெய்.. மின் கடிதம் அனுப்பறேன்..

வினோ said...

நன்றி மனோ...

வினோ said...

Thanks Ahamed :)

வினோ said...

வாங்க சதீஷ்.. நடக்கலாம்.

வினோ said...

செல்வா அந்த சாப்பாடு மேட்டரு கேட்க்ககூடாது

வினோ said...

மிக்க நன்றிங்க வேலு..

பா.ராஜாராம் said...

அருமையாய் எழுதி இருக்க வினோ. புகைப் படங்களும் மிக அருமை. தொடரவும்.

வினோ said...

அப்ப மிகக் நன்றி..

தமிழ்க்காதலன் said...

அருமை தோழரே, மிக அருமையான நடையில் எழுதி இருக்கிறீர், ஒரு தகப்பன் கைப் பிடித்து நடக்கும் குழந்தைப் போல் உங்கள் வரிகள் பின் பற்றி உம்முடனே நாமும் பிரயாணம் செய்ய முடிகிறது. "ஓசியில் ஊர் சுற்றிக் காட்டியதற்கு நன்றி தோழா.

தமிழ்க்காதலன் said...

"ஒருவேளை உணவுக்கு இவ்வளவு செலவாகுதேன்னு நெனைச்சாதான்" ம்ம்ம்ம் அப்பாஆஅ....!!! பயமா இருக்கு.

"ராஜா" said...

நல்லா enjoy பண்ணிருக்கீங்க.... ஆனா சாப்பாட்டுக்கு ஆனா செலவ பாத்தாதான் பயமா இருக்கு...

வினோ said...

வாங்க தமிழ்க் காதலன்.. மிக்க நன்றி.. சாப்பாட்டு செலவு ஒன்னும் பெருசா இல்லைங்க. 25 pounds ஆச்சு....

வினோ said...

மிக்க நன்றி ராஜா.. இன்னும் ஒரு பதிவு இருக்கு...

பவள சங்கரி said...

அழகான நடை.... படங்கள் அருமை.....வாழ்த்துக்கள்.

ஜில்தண்ணி said...

வீடு மாத்துனதகூட இம்புட்டு அழகா எழுத முடியுமா :)

மச்சி மனோ பாத்துக்க நீயும் தான் எழுதிரியே பயணத் தொடர் :) ஹீ ஹீ

எல்லாம் போட்டோவும் செம செம :)

வினோ said...

@ நித்திலம் - மிக்க நன்றி சகோ..

வினோ said...

ஜில்லு பின்னூட்டத்திற்கு நன்றி.. உள்குத்து இல்லையே? :(

ஹேமா said...

உங்களோடு பயணம் செய்யும் உணர்வோடு அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

வினோ said...

வாங்க ஹேமா... மிக்க நன்றி.. எப்படி இருக்கீங்க?