25 Aug 2010

சுனை உறவு




*******************************************
திக்கற்ற திசை
நம்பி வாழ்
நீளக் கரம்...
*******************************************

பதின்மத்தில் மூளையில் முளைக்கும் இளமையின் வேட்கையின் முதல் படி. நேசத்தின் அளவுகோளின் உயரம் சற்றே தடுமாறிப் போகும் கணங்களில் பிடித்து தட்டி நிறுத்தும் கரங்களுக்கு வாழ்வை ஒப்படைத்து நாட்கள் நகருகின்றன.

ஈராறு வருடங்களுக்கு பின்னோக்கி பயணக்கிறது நினைவுகள். கல்லூரி மண் மிதித்து சில இடர்களைத் தாண்டி மெல்ல எழுந்த எட்டுதிசையின் புள்ளிகளில் மணக்கிறது எங்கள் கோலம்.

*******************************************
ஏழல்ல எட்டு
நாம் சேர
திரியும் வில்...
*******************************************

இனம் அறிந்து மொழி புரிந்து இணைகிற உள்ளங்கள். உள்புகு மென்மையை வருடிச் செல்லும் நிகழ்வுகள். நிஜங்களின் அருகாமையில் பிணைகிறது ஒரு இசை. இசையில் நுகர்கிறோம்.

கானகத்தில் கடுங்குளிரும் பெரும் மழையும் மாறிப் பொழியும் பொழுதுகளுக்கு நடுவில் வசந்தங்களின் அரவனைப்புகளும் தழுவக் கண்டோம்.

வாதங்களும் விவாதங்களும் சிரிப்புகளும் சிற்சிறு உரசல்களும் யுகங்களை விழுங்க வைகறை வேளையில் ததும்பும் புன்னகைகளே விடியல்கள்.

*******************************************
கண்கள் வழி ஊட
இருதயம் புக பரவ
இதழ் தூவ நகை...
*******************************************

முழுமதியை ஒரு எண்பது முறை கண்டிருப்போமா? மதியில் இல்லை... ஆனால் எங்கள் அரட்டைச் சிறகுகள் கண்டு நிலவு ஒதுங்கிய இரவுகளே இன்னும் ஞாயாபகத்தில்...

அன்றில் பறவைகளாய் துள்ளித் திரிய இல்லை இன்பம். நட்பின் மாமனும் மச்சானும் அக்காவும் சித்தியும் எங்களுக்குமாய் அமைய கண்டே வடிந்ததே வாழ்க்கை.

ஆடி பிறக்க ஞாயிறு அழைக்க மூன்று ஆண்டுகளாய் விதைத்த செடியொன்றின் விழுதுகளின் ஆழத்தில் மணக்கிறது எங்கள் நட்பின் இறுக்கம்.

*******************************************
அரும்ப கவி
ஆழ நேசம்
படர் நிம்
மதி வெண்...
*******************************************

பேருந்து பயணம், வீதியோர நடை, வயல்வரப்பு அமர்வு, தாகம் தணிக்கும் ஓடை, தோள் சாய தோழி, வளரும் பாசம்.

கனவுகள் பல கவிதைகள் பல கனத்து கரைந்து போகும் தருணங்களைத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவன், நான் அப்பா என்கிறான். அட, அவள் நானும் அம்மா என்கிறாள்.
அடடா, இப்போ நானும் அப்பா...

*******************************************
காலம் நடை
வயது விடை
கனியும் உறவு...
*******************************************

இன்னும் சுரந்துக் கொண்டிருக்கும் நட்பு....

29 comments:

எஸ்.கே said...

அருமை! அருமை!

sakthi said...

கானகத்தில் கடுங்குளிரும் பெரும் மழையும் மாறிப் பொழியும் பொழுதுகளுக்கு நடுவில் வசந்தங்களின் அரவனைப்புகளும் தழுவக் கண்டோம்.

அருமை வினோ

sakthi said...

வாதங்களும் விவாதங்களும் சிரிப்புகளும் சிற்சிறு உரசல்களும் யுகங்களை விழுங்க வைகறை வேளையில் ததும்பும் புன்னகைகளே விடியல்கள்.

நல்லாயிருக்குங்க இவ்வரிகள்

செல்வா said...

///வாதங்களும் விவாதங்களும் சிரிப்புகளும் சிற்சிறு உரசல்களும் யுகங்களை விழுங்க வைகறை வேளையில் ததும்பும் புன்னகைகளே விடியல்கள்.///
பட்டைய கிளப்பிருக்கீங்க .!
அந்த விளக்கங்கள் சூப்பர் ..!!

KUTTI said...

VERY NICE & SWEET TO READ...


MANO

வினோ said...

நன்றி எஸ் கே..

வினோ said...

வாங்க சக்தி.. நீங்களே சொல்லிடீங்கள.. அப்ப பிரேம் போடா வேண்டியதுதான்.. மிக்க நன்றி சக்தி..

வினோ said...

நன்றி செல்வா...

வினோ said...

நன்றி மனோ..

Chitra said...

ஒவ்வொரு கவிதையிலும் , முத்தான அர்த்தம் ஒளிந்து இருப்பது, அழகு!

வினோ said...

மிக்க நன்றி சித்ரா...

Anonymous said...

அருமை வினோ!
//கானகத்தில் கடுங்குளிரும் பெரும் மழையும் மாறிப் பொழியும் பொழுதுகளுக்கு நடுவில் வசந்தங்களின் அரவனைப்புகளும் தழுவக் கண்டோம்.//
எக்சலென்ட்!

வினோ said...

நன்றி பாலாஜி..

கவி அழகன் said...

அஹா அருமை புதிய முயற்சி இப்படிபட்ட படைப்பை இப்பொழுதுதான் பார்கிறேன்

வினோ said...

வாங்க யாதவன்.. வந்தமைக்கும் பின்னுட்டதிற்க்கும் நன்றி..

பா.ராஜாராம் said...

புதுசா இருக்கு வினோ. அழகா

தலைப்பு, படம், கவிதைகள், மொழி எல்லாம்.

வினோ said...

வாங்க பா ரா அண்ணே.. மிக்க நன்றி.. கொஞ்சம் புதிய முயற்சி.. (எனக்கு) :)

ஹேமா said...

வித்தியாசமான முறையில் கவிதையோடு ஒரு படைப்பு.
அருமை விநோ.

வினோ said...

மிக்க நன்றி ஹேமா... எனக்கு இது புதுசுங்க..

சிவாஜி சங்கர் said...

அரும்ப கவி
ஆழ நேசம்
படர் நிம்
மதி வெண்...

:)அண்ணா.......... நல்லாருக்கு...........

வினோ said...

நன்றி சிவா...

Ahamed irshad said...

Super Lines...

Jey said...

நைஸ்.

ஜெயசீலன் said...

Excellent....

vanavil selva said...

Hai da
this s vanavil selva
nice lines da machan
pindra
clg padiku pothu ivlo talent illaye
ipa matu epdida

வினோ said...

நன்றி அஹமது.. ரசித்தமைக்கும் பின்னுட்டத்திற்கு

வினோ said...

வாங்க Jey.. நன்றி ரசித்தமைக்கும் பின்னுட்டத்திற்கு.

வினோ said...

வாங்க Jayaseelan.. நன்றி.. நலமா?

தமிழ்க்காதலன் said...

உங்களின் எழுத்துக்கள் உங்களின் "பசுமையான நினைவுகளை" மட்டும் அடையாளம் காட்டவில்லை. உங்களையும்தான். நல்ல ரசனைத் தோழா உங்களுக்கு.