அழகிய தமிழ் மணக்கும் கொங்கு நாடான கோவையில், குளிரின் அரவணைப்பில் தவழும் ஒரு குட்டி போத்தனூரில் வாழ்க்கையை தொடங்கிவன் நான்...
பள்ளி பருவத்திலிருந்தே கலைகளில் நாட்டம் கொண்ட எனக்கு தீனி போட்டது கல்லூரி. கனவுகள் ஆயிரம் காண் என்றும் திரிந்தவனுக்கு நெகிழ்வுகள் ஆயிரம் அள்ளி தெளித்தது நட்பு...
படிப்பின் மீது கவனம் சிறிதளவில் இருந்தாலும், கூத்து, கிறுக்கல்களின் மீது அதிகம் இருந்தது. இதில் விளைந்ததுவே அகலவியலா நட்புகள். அதனுடே வளர்ந்ததுவே வாழ்க்கை தேவைகளின் மீதான காதலும்.
என்ன தான் நாட்டுப்பற்றும் ஊரின் மீது பிடிப்பும் வலுவாக இருந்தாலும், என் காலங்களில் பல பேர் விதைத்த வெளிநாட்டு மோகம் இல்லாமலும் இல்லை. ஆம், நான் கண்ட கனவு காட்சிகள் எல்லாம் கணினி வழியாக மனதில் குடி கொண்டன...
உலா வந்து கனவுகளில் ஒன்று தான் அனைவரையும் கவரும் வெள்ளை திரள்களில் கால் புதைய நடந்து, ஓடி, ஆடி, விளையாடும் தருணங்கள். இதோ இனி முதல் பனி பாகம் 1 (அப்பாட முன்னுரையே இவ்வளவா? )
அட இதுக்கு மேல இப்போ ஒன்னும் இல்லைங்க.. வாங்க என் சந்தோசங்களை புகைப்படங்கள் மூலமா...
பெரிய வெள்ளை புறா சிறகு விரித்தால்
கொட்டும் பனி மழை - 1
நனையும் மரங்கள்
என் வீட்டு சன்னல் வழியாக
கொட்டும் பனி மழை - 2
கொட்டும் பனி மழை - 3
மூன்றாம் தளத்திலிருந்து - 1
மூன்றாம் தளத்திலிருந்து - தரை...
போர்வை போர்த்திய வீடுகள் -1
(மூன்றாம் தளத்திலிருந்து )
போர்வை போர்த்திய வீடுகள் -2
(மூன்றாம் தளத்திலிருந்து )
எங்கோ ஓர் இடத்தில் வெளிச்சம் என்றும் இருக்கும்...
யாழின் கொண்டாட்டம்...
இந்த புகைப்படங்கள் அனைத்தும் என் அலைபேசி மூலம் எடுக்கப்பட்டது.
பனி இன்னும் கொட்டும்.......
47 comments:
முதல் அனுபவம் யாழினிக்குதான்..
மிக அழகிய படங்கள்.
முன்னுரை வசீகரம்.
உங்கள் குதூகலம் - பதிவிலும் படங்களிலும். தொடரட்டும்!!
பனியும் படங்களும் அழகு..தொடர்ந்து கொட்டடும்..
இவ்வளவு குளிரான இடமா?
வாவ்.
உங்கள் மகள் பெயர் யாழினியா வினோ ?எப்போதும் யோசிப்பேன் லேபிளில் "யாழ்"ன்னு இருக்குன்னு.
எங்க ஊர்க்காரரோன்னுகூட நினைச்சிருக்கேன்.அந்தப் பெயரில் அப்படி ஒரு காதல்.பெயர் வைத்த உங்களுக்குப் பாராட்டுக்கள் வினோ !
வெள்ளை மழையில் நாங்கள் இங்கே அவதிப்படுகிறோம்.ஆனாலும் அழகும் ரசிக்கிற இயற்கைக் காட்சியுமாய் வெள்ளை மலைகள் !
அருமையான படங்கள் வினோ.. எழுத்தும் வசிகரிக்கிறது.
ஹாய் யாழினி வாழ்த்துக்கள்
நண்பரே நல்ல பெயர்
எனது ஊரின் பெயர் யாழ்ப்பாணம்
நல்ல படைப்பு
நீங்கள் தங்கி இருக்கும் இடம் அருமை நண்பா... பனிபோர்த்திய பூமி... ம்ம்ம்
கொண்டாடுங்கள் நண்பா
பிரிட்டனின் நல்ல பனிப்பொழிவு என்ன? கனடாவில் எம் பகுதியில் பனி இல்லாததால் பணிக்கு நல்லபடியாக செல்கிறோம். என் முதல் பனியும் இப்படித் தான் இருந்தது, போக போக வெறுத்துவிட்டது.
யாழினி அருமையான பெயர். படங்களும் அருமை
கொண்டாடுங்க வினோ யாழினிக்கு வாழ்த்துக்கள்
படங்கள் அருமை வரிகளும் பேசுகின்றன
முன்னுரையே முழுமையாக ஆட்க்கொள்ளுகிறது நண்பரே.. படங்கள் மேலும் குளுமையையூட்டுகிறது...
யாழினிக்கு தான் கொண்டாட்டமாகவும்.. இனிமையான அனுவபமாகவும் இருக்கும்...
போட்டோ எல்லாமே கலக்கல் அண்ணா .,
அதே சமயம் உங்க முன்னுரையும் நல்லா இருக்கு .. நம்ம ஊர் பத்தி சொன்னது ..!!
அற்புதமான படங்கள்!
அழகான அருமையான புகைப்படங்கள் வினோ!!! யாழினி எனஜாய்
நீங்க அனுபவித்த பரவசம் நாங்களும் அனுபவித்து விட்டோம் உங்கள் படங்களின் மூலம்....
ஆமா செந்தில் அண்ணா..
நன்றி காமராஜ் அண்ணா..
நன்றி சித்ரா சகோ.. நீங்களும் பார்த்தது தானே...
நன்றி ஹரிஸ்
ஆம் அன்பரசன்...
ஆம், ஹேமா.. முழு பெயர் கவியழினி... யாழினி என்று அழைக்கிறோம்..
மிக்க நன்றி.. புதிய அனுபவம் இல்லையா, என்றுமே ஆனந்தம் தான்..
நன்றி இராமசாமி..
நன்றி யாதவன்...
நன்றி ராஜா..
என்னா குளிர் என்னா குளிர்... அப்படி ஒரு குளு குளுப்பு... அருமைங்கோ..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நனைவோமா ?
நன்றி அன்கிதவர்மா.. உங்கள் முதல் வருகைக்கும், பின்னுட்டத்திற்க்கும்... தமிழை தாய் மொழியா பார்க்கும் உங்களுக்கு என் வந்தனங்கள்..
நன்றி தினேஷ்...
ஆம் ஜெய்...
நன்றி செல்வா...
நன்றி எஸ்.கே
நன்றி ரமேஷ்...
நன்றி சக்தி..
நன்றி அருண்..
நன்றி கௌசல்யா...
நன்றி சுதா...
எங்கு எடுத்தவை இந்த படங்கள்?.எல்லாம் அழகு
படங்கள் அனைத்தும் அருமை.
தற்சமயம் எங்கே இருக்கிறீர்கள்.
கோவை வரும் போது தகவல் சொல்லவும்.
இனி எப்போது வருவீர்கள்.
மேட்டுப்பாளையம் வந்ததுண்டா எப்போதாவது?
நன்றி சிவகுமாரன். நான் இப்பொழுது இருப்பது Belfast, UK.
நன்றி பாரத் பாரதி
எனது அம்மாவின் பிறப்பிடமே மேட்டுப்பாளையம் தான்..பல முறை அங்கு வந்துள்ளேன்...
நான் இப்பொழுது இருப்பது Belfast, UK.
எல்லா புகைப்படங்களுமே மிகவும் அருமையாக இருக்கின்றன வினோ...
//
எங்கோ ஓர் இடத்தில் வெளிச்சம் என்றும் இருக்கும்...
சூப்பர் வரிகள்...
Pictures perfect..
Mist moisturise me..
நன்றி ரமேஷ்..
Thanks Thanglish
போடோஸ் ரொம்ப நல்லா இருக்கு வினோ
யாழினியை பத்திரமா பாத்துக்குங்க..
, .
Post a Comment