10 Dec 2010

முதல் பனி - 2
பனி என்றால்
அழகு, சந்தோசம், இனம் புரியா ஆனந்தம்.
உங்கள் முதல்
கவிதை
சம்பளம்
காதல்
பிள்ளையின் முதல் மொழி , அம்மா/அப்பா, முதல் கிறுக்கல்
முத்தம்....
இன்னும் பல சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி பல நிகழ்வுகளை நினைவில் நிறைத்து சுவாசிக்கலாம் இன்பத்தை.

பதின்ம  வயதில் கிறுக்கத் தொடங்கிய எனக்கு, எழுத்தைப் பற்றியும், மொழியை பற்றியும் பெரிய ஞானம் இருந்ததில்லை (இப்போ மட்டும் என்னவாம் ன்னு கேட்காதீங்க ப்ளீஸ்).

நாம் காதலிக்கும் பெண் நம்மை காதலிக்க, 
காதலின் வேகம் கூடுமே அப்படி,
எழுத்தின் வலிமையை உணர்ந்த தருணங்களில் எழுதும் வேகம் கூடியது. அதன் வழியே நட்புகளும் அமையப்பெற்றன உங்களைப்  போல.

நான் அனுபவித்த முதல் பனி எப்படி ஓர் அழகிய உணர்வோ, 
அதையே பிரதி எடுக்கும்
சில மனிதர்களின் சந்திப்பும், கை குலுக்கல்களும்.

இப்போ உங்களுக்கு புரிந்திருக்குமே, உங்கள் கணிப்பு சரிதான்...
இனி அப்படியான ஓர் அருமையான முதல் சந்திப்பு...

அன்று திருவிழா...
பட்டாசுகள் காதின் ஆழம் வரை சத்தத்தின் வலிமையைக் கொண்டு சென்ற களைப்பில் உறங்கப்போகும் அந்த இரவு வேளையில், 
நீண்டப் பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தது மனசு...

ரோட்டோரக் கடையை திறக்க வைத்து, நாங்கள் சில பல ரொட்டிகளை உள்ளே தள்ளிய பின், உருமத் தொடங்கியது டாடாவின் குடும்பக் கார் ஒன்று.

ஏதோ பார்க்காததை பார்ப்பது போல் நெடுக, வழியை பார்த்து பார்த்து தேட வைத்து விட்டார் வருண பகவான். எங்களின்  நிழலாய் துரத்திக்கிட்டே இரண்டு மணி நேரம் வந்தார்...

மழையுடன் பாதைகளை அளந்துக் கொண்டிருந்த எங்களுக்கு, சொன்ன நேரத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் வந்து சேர்கிறது அலைபேசி அலறல்.

"என்னப்பா எங்க இருக்கீங்க ?" - அந்தப் பக்க குரல்
"வந்துக் கொண்டே இருக்கோம் பா" - இது நான்

நேரம் - இரவு / விடியல் - 2.20AM

கொட்டும் மழையில் நனையும் பூப்போல, இந்த பாச மழையில்  நனைந்து நிறைகிறது என் உள்ளம்.. 

அங்க இங்க பாதையை புடிச்சு டீ குடிக்கும் மனசு அலையும் விடியல் நேரம் ஹோட்டலுக்குள் தஞ்சம் புகுந்த எங்களின் கண்கள் ஓய்விற்கு செல்ல, கைகளும் கால்களும் எனக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லை என்று தனியே பாய்விரித்தது...

வெயில் எழுப்பியது என்னை..
அலைபேசியில் செய்தி " எழுந்தவுடன் கூப்பிடு"

எழுந்துவிட்டேன், படித்துவிட்டேன், அழைக்கிறேன்..

"வினோபா, என்னயா இப்போவே எழுந்திருச்சாச்சா?"
"ஆமாம்பா"
"எத்தனை மணிக்கு வரட்டும்?"
"ஒரு ஒன்பது மணிக்கு ரெடி ஆயிருவேன்"
"சரிப்பா  வரேன்"


குளித்துவிட்டு வெளியே வருகிறேன்.. சட்டைய தேடிக் கொண்டிருக்கிறேன், வாசல் மணி அழைக்க,
அவர் குரல் உள்ளிருக்கும் காற்றுடன் கலைகிறது..

"வினோ"
"இதோ வரேன்ப்பா"

ஒல்லியான உருவம், ஒரு T-Shirt, Jeans, அவ்வளவே..
இதழில் புன்னகை, மனதில் அமைதி, கரம் விரித்துக்கொண்டே வருகிறார்..

ஆரத்தழுவிக்  கொள்கிறோம்... மனசும், பாசமும், சந்தோசமும் தனித்தனியே தழுவிக் கொள்கிறது.. 

அவரின் அனைத்தும், என்னை ஆட்கொள்கிறது எளிமையாய், முழுமையாய் அவரது கவிதைகளைப் போல...

பனி இன்னும் கொட்டும்...

45 comments:

dineshkumar said...

தல சுவாரஸ்யமா கொண்டுவர்றீங்க வாங்க வாங்க

நாம் காதலிக்கும் பெண் நம்மை காதலிக்க, காதலின் வேகம் கூடுமே அப்படி,
எழுத்தின் வலிமையை உணர்ந்த தருணங்களில் எழுதும் வேகம் கூடியது.

ம.தி.சுதா said...

அருமையாக சுவாரசியம் குன்றாமல் நகர்த்துகிறீர்கள்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

எஸ்.கே said...

சுவாரசியமான எழுத்துக்கள்! சில வர்ணனைகள் அருமையாக உள்ளது!

Chitra said...

அழகான பதிவு... தொடருங்கள்!

வினோ said...

நன்றி தினேஷ்..

வினோ said...

நன்றி சுதா..

வினோ said...

நன்றி எஸ் கே..

வினோ said...

நன்றி சித்ரா சகோ

வெறும்பய said...

நண்பரே வழக்கத்துக்கு மாறான சுவாரஸ்யம்.. அருமை.. தொடருங்கள்..

கோமாளி செல்வா said...

//பதின்ம வயதில் கிறுக்கத் தொடங்கிய எனக்கு, எழுத்தைப் பற்றியும், மொழியை பற்றியும் பெரிய ஞானம் இருந்ததில்லை (இப்போ மட்டும் என்னவாம் ன்னு கேட்காதீங்க ப்ளீஸ்). /

ஐயோ , என்ன விட உங்களுக்கு அதிக ஞானம் இருக்கு அண்ணா .!

கோமாளி செல்வா said...

பனி இன்னும் கொட்டட்டும் அண்ணா ..!!

sakthi said...

நல்ல நடை வினோ தொடருங்கள் உங்கள் அனுபவங்களை தெரிந்து கொள்ள நாங்களும் ஆவலுடன் உள்ளோம்!!!

நாகராஜசோழன் MA said...

நல்லாருக்கு. தொடருங்கள்.

கமலேஷ் said...

பனி என்றால்
அழகு, சந்தோசம், இனம் புரியா ஆனந்தம்.
முதல் காதல்
முதல் முத்தம்
முதல் கவிதை
முதல் சம்பளம்
பிள்ளையின் முதல் மொழி.

ம்ம்...ரொம்ப அழகா இருக்கு வினோ...


அப்பாவை பார்த்த மகனா எழுதுறீங்களா..

அப்பொழுது ஜாக்கிரதை -

மழலைக்கு முலையூட்டும் மார்பு நரம்புகளில்
உருவி சாடும் வெள்ளை ரத்தத்தை ரசித்த படி
கண் சொருக கிடக்கும் ஒரு தாயின் உணர்வுகளை வரிகளாக்க துவங்குகிறீர்கள்

அணு அணுவான அந்த அழகான நிமிடங்களை உங்களிடம் அதீதமாக எதிர்பார்ப்போம்.

எந்த நிமிடங்களையும் தவற விடாமல் கவனமாக தொடருங்கள்

வாழ்த்துக்கள்.

சிவாஜி சங்கர் said...

நல்லா இருக்கு அண்ணே.. :)

வினோ said...

நன்றி ஜெய்...

வினோ said...

நன்றி செல்வா...

வினோ said...

நன்றி சக்தி..

வினோ said...

நன்றி நாகராஜசோழன்

வினோ said...

அய்யா கமலேஷ்.. என்னால் முடிந்தவரை கண்டிப்பா..

வினோ said...

நன்றி சிவா...

அன்பரசன் said...

எழுத்து நடை மிகவும் அருமை.

ஹேமா said...

பதிவு குளிர்மையா இருக்கு வினோ.பாரா அண்ணா
வந்திருக்கார் போல !

பாரத்... பாரதி... said...

//நாம் காதலிக்கும் பெண் நம்மை காதலிக்க, காதலின் வேகம் கூடுமே அப்படி,
எழுத்தின் வலிமையை உணர்ந்த தருணங்களில் எழுதும் வேகம் கூடியது.//
அருமையான வார்த்தைகளின் ஊர்வலம்..
எழுதிய விதம், வார்த்தைகளின் கோர்வை நன்றாக இருக்கிறது. பதிவு எதை நோக்கி பயணிக்கிறது என்பதை கணிக்க இயலவில்லை. அதுவும் ஒரு பிளஸ் தான்...

பிரஷா said...

அருமை தொடருங்கள் வினோ...வாழ்த்துக்கள்

"ராஜா" said...

excellent narration vino.. keep it up

வினோ said...

நன்றி அன்பரசன்...

வினோ said...

ஹேமா :)

வினோ said...

நன்றி பாரத் பாரதி

வினோ said...

நன்றி பிரஷா..

வினோ said...

நன்றி ராஜா..

யாதவன் said...

என்ன ஒரு அனுபவம்

tamil blogs said...

தமிழ் வலைப்பூக்கள் உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://tamilblogs.corank.com/

பாரத்... பாரதி... said...

ஏன் அடுத்த பதிவு எழுதவில்லை?

பாரத்... பாரதி... said...

//எந்த நிமிடங்களையும் தவற விடாமல் கவனமாக தொடருங்கள் //

பட்டாபட்டி.... said...

ஒரு வணக்கத்தை போட்டுக்கிறேன்..

அப்பால வரேன் பிரதர்...

வினோ said...

நன்றி யாதவன்

வினோ said...

வேலை கொஞ்சம் பாரத் பாரதி...

வினோ said...

நன்றி பட்டாபட்டி..

பிரியமுடன் ரமேஷ் said...

அருமையா எழுதறீங்க வினோ.. வாழ்த்துக்கள்

தேனம்மை லெக்ஷ்மணன் said...

மிக அழகா இருக்கு .. யாரை சந்திச்சீங்க வினோ..

வினோ said...

நன்றி ரமேஷ்..

வினோ said...

நன்றிங்க தேன் அக்கா...

Meena said...

நாம் காதலிக்கும் பெண் நம்மை காதலிக்க,
காதலின் வேகம் கூடுமே அப்படி,
//எழுத்தின் வலிமையை உணர்ந்த தருணங்களில் எழுதும் வேகம் கூடியது. அதன் வழியே நட்புகளும் அமையப்பெற்றன உங்களைப் போல.

நான் அனுபவித்த முதல் பனி எப்படி ஓர் அழகிய உணர்வோ,
அதையே பிரதி எடுக்கும்
சில மனிதர்களின் சந்திப்பும், கை குலுக்கல்களும்.//

சூப்பர் இந்த வரிகள்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க.. யாருங்க வந்தது....சீக்கிரம் சொல்லுங்க.. :-)

உங்களுக்கு என் இனிய, புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!