19 Nov 2010

மிளிர்கிறது


பறந்து வந்த
அந்த முன்னிரவில்
வேர் அசைக்க
தலையாட்டும் மரக்கிளையில்
மழை துளிகள்
சுமக்கும் இலைகள்
முன்னின்று  வரவேற்கிறது
இளங்குயில்களை...

சன்னல்  கண்ணாடியில்
புகை பரவும்
குளிர் இரவில்
பிஞ்சு
விரல்கள் வரைந்த
புன்னகை பொம்மையில்
மிளிர்கிறது யாழின்
இன்பம்....

பனிரெண்டு சுவர்களுக்குள்

தொடங்கப்பட்ட
புதிய அத்தியாயத்தில்
சின்ன
கொலுசுகளில்
பட்டுத் தெறிக்கும்
அவளின்
அப்பா அப்பா
செல்ல சிணுங்கல்களில்
மிளிர்கிறது என்
இன்பம்.....

61 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நண்பா...

பிள்ளைகளுடன் போக்கும் பொழுதுக்கு விலை கொடுக்க முடியுமா...

க ரா said...

அந்த சுகத்துக்கு இடுஇணை எதுவும் இல்லயே :)

எஸ்.கே said...

அழகான கவிதை அருமை!

தினேஷ்குமார் said...

இனிமையான வரிகள் நண்பா .......

மழலை பேச்சு கேட்க்க கேட்க்க திகட்டாத அமிர்தம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆஹா அருமை, பிள்ளைகளோடு இருக்கும் தருணங்கள் மிக உன்னதமானவை!

KUTTI said...

GREAT. Excellent lines vino. Want to share lot of things about this poet. But I couldn due to typing this comment through phone. Mail you later.

sathishsangkavi.blogspot.com said...

//அவளின்
அப்பா அப்பா
செல்ல சிணுங்கல்களில்
மிளிர்கிறது என்
இன்பம்....//

உண்மை...

sakthi said...

பிஞ்சு
விரல்கள் வரைந்த
புன்னைகை பொம்மையில்
மிளிர்கிறது யாழின்
இன்பம்..

ஆஹா எஞ்சாய் வினோ

மழலையின் மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்கட்டும்

sakthi said...

அவளின்
அப்பா அப்பாசெல்ல சிணுங்கல்களில்மிளிர்கிறது என்
இன்பம்.....

நடக்கட்டும் சகோ

Kousalya Raj said...

திகட்டாத இன்பம் ஒன்று உண்டென்றால் மழலையுடன் இருக்கும் அந்த தருணங்கள் மட்டும் தான். அதை அழகிய வடிவாக்கி இருக்கிறீர்கள் கவிதையில்....வாழ்த்துக்கள்.


//புன்னைகை//

'புன்னகை' இப்படி மாத்தலாமா?

வினோ said...

மாத்திட்டேன் kousalya... மிக்க நன்றி

Unknown said...

மிக மிக ரசித்தேன்.. :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அழகான கவிதை அருமை!

அன்பரசன் said...

பின்னிட்டீங்க.

"ராஜா" said...

கொடுத்து வைத்த குழந்தை குடுத்து வைத்த அப்பா

NaSo said...

கவிதைகளும் அதற்கு தேர்வு செய்த படம் நன்றாக இருக்கிறது நண்பரே!

Sriakila said...

குழந்தையை ஒவ்வொருக் கட்டத்திலும் அருகிலிருந்துப் பார்த்து ரசிப்பது ஒரு அழகு. அது ஒரு திகட்டாத இன்பம்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

குழந்தையின் சிணுங்கல்களும் அழகு தான்.. :-))

நீங்க ரசித்து சொன்ன விதமும் அழகு..!!

வினோ said...

விலையே இல்லை ஜெய்...

வினோ said...

ஆமாங்க இராமசாமி கண்ணன்..

வினோ said...

நன்றி எஸ்.கே

வினோ said...

நன்றி தினேஷ்...

வினோ said...

ஆம் ராமசாமி..

வினோ said...

Thanks Mano.. We can always speak..

வினோ said...

நன்றி சங்கவி...

வினோ said...

மிக்க நன்றி சக்தி.. கண்டிப்பா தொடரும்..

வினோ said...

நன்றி இளங்கோ அண்ணா..

வினோ said...

நன்றிங்க ரமேஷ்..

வினோ said...

நன்றி அன்பரசன்...

வினோ said...

நன்றி ராஜா..

வினோ said...

நன்றிங்க நாகராஜசோழன்..

வினோ said...

ஆம் ஸ்ரீஅகிலா... மிக்க நன்றி..

வினோ said...

நன்றிங்க ஆனந்தி...

ஹேமா said...

வினோ...ரொம்பச் சந்தோஷமா இருக்கீங்க.அந்தச் சந்தோஷத்தை எங்களுக்கும் தந்திருக்கீங்க.நன்றி !

Thenammai Lakshmanan said...

புன்னகை பொம்மை அருமை வினோ..:))

முனைவர் இரா.குணசீலன் said...

மிளிர்கிறது

Unknown said...

கவி யாழினி புதிய இடத்துக்கு பழகிவிட்டாளா?

செல்வா said...

//சின்ன கொலுசுகளில்
பட்டுத் தெறிக்கும்
அவளின்
அப்பா அப்பா
செல்ல சிணுங்கல்களில்
மிளிர்கிறது என்
இன்பம்.....
///

நல்லா இருக்கு அண்ணா .!!

ஜெயசீலன் said...

//பறந்து வந்த
அந்த முன்னிரவில்
வேர் அசைக்க
தலையாட்டும் மரக்கிளையில்
மழை துளிகள்
சுமக்கும் இலைகள்
முன்னின்று வரவேற்கிறது
இளங்குயில்களை...//

அசத்தலான கவிநயம்.

//சன்னல் கண்ணாடியில்புகை பரவும்
குளிர் இரவில்
பிஞ்சு
விரல்கள் வரைந்த
புன்னகை பொம்மையில்
மிளிர்கிறது யாழின்
இன்பம்....//

இதை படிக்கும் போதும் யாழின் இன்பம்.

//பனிரெண்டு சுவர்களுக்குள்
தொடங்கப்பட்டபுதிய அத்தியாயத்தில்
சின்ன கொலுசுகளில்
பட்டுத் தெறிக்கும்
அவளின்
அப்பா அப்பாசெல்ல சிணுங்கல்களில்மிளிர்கிறது என்
இன்பம்.....//

கொண்ணுட்டீங்க...

dheva said...

சம கால உணர்வுகள் மொழிபெயர்க்கப்பட்டு வரி வடிவில்....

அருமை தம்பி...அப்படியே அன்பு முத்தங்கள் செல்ல மகளுக்கும்....!!!!!!!

காமராஜ் said...

//பிஞ்சு
விரல்கள் வரைந்த
புன்னைகை பொம்மையில்
மிளிர்கிறது யாழின்
இன்பம்..//

உலகத்தின் எல்லா சேட்டைகளையும் ரசிக்கவைக்கிற நீர்மைத் தன்மைக்கு சொந்தக்காரர்கள்.

குழல் இனிது.. என்ப தம் மழலைச்சொல்கேளாதோர்.

ரெண்டுமே அழகு வினோ.

வினோ said...

வாங்க ஹேமா... மிக்க நன்றி...

வினோ said...

நன்றி தேனம்மை அக்கா...

வினோ said...

நன்றி குணசீலன்...

வினோ said...

பழகிக் கொண்டிருக்கிறாள் கே அர் பி அண்ணா..

வினோ said...

நன்றி செல்வா...

வினோ said...

நன்றி ஜெயசீலன்..

வினோ said...

நன்றி தேவா அண்ணா.. கொடுத்துவிட்டேன்...

வினோ said...

மிக்க நன்றி காமராஜ் அண்ணா...

Ahamed irshad said...

கவிதை அருமை!

http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_21.html

வினோ said...

நன்றிங்க அஹமது...

கவி அழகன் said...

வழமைபோல் சுப்பர்

அவளின்
அப்பா அப்பா
செல்ல சிணுங்கல்களில்
மிளிர்கிறது என்
இன்பம்....

எனக்கு பிடித்த கவிதை வரிகள் ரசித்த கவிதை

இம்சைஅரசன் பாபு.. said...

பிள்ளைகளுடன் விளையாடும் பொழுது எல்லோரும் சிறு குழந்தையாகவே மாறி விடுவோமே .........கவிதை அருமை மக்கா

வினோ said...

நன்றி பாபு..

அன்புடன் மலிக்கா said...

அருமையா உணர்வுகள் வினோ

அப்படியே வாங்க உங்களை தொடருக்கு அழைத்துள்ளேன்
http://niroodai.blogspot.com/2010/11/blog-post_23.html//
நாங்களும் எழுதியிருக்கோம் வந்துபாருங்க.

Chitra said...

சன்னல் கண்ணாடியில்
புகை பரவும்
குளிர் இரவில்
பிஞ்சு
விரல்கள் வரைந்த
புன்னகை பொம்மையில்
மிளிர்கிறது யாழின்
இன்பம்....


...So cute!!!

சிவகுமாரன் said...

மழலைச் சொல் கேட்ட இன்பம் மனதில்

நன்றி நண்பா

வினோ said...

நன்றி மலிக்கா...

வினோ said...

நன்றி சித்ரா..

வினோ said...

நன்றி சிவகுமாரன்...

கமலேஷ் said...

ஹலோ,

சும்மா சும்மா யாழினியை கவிதைல காமிச்சே ஆசை காட்டிகிட்டு இருந்தீங்கன்னா
வந்து பாப்பாவை என் வீட்டுக்கு தூக்கிட்டு போய்டுவேன் ஜாக்கிரதை.

அப்புறம் உங்க பேனால கவிதை வராது -
வெறும் காத்துதான் வரும்...