28 Sept 2010

நீர் பறவைகள் - கருவேல நிழலில்



சில முடிச்சுகள் அங்கு அவிழ்க்கப்பட்டுக் கொண்டிருந்தன.

எங்கோ என்றோ பதியப் பட்ட வரலாற்றின்
புரை ஏறும் அன்பின் கிளைகள் இங்கு இணைத்து கொண்டன..

சுயம் தேடும் பறவையும்.,
அதன் தோள் சாயும் குயிலும்...
மாலை மங்கி சரியத் தொடங்கிய ஓர் இரவில்.....
எதிர்பார்க்கா ஒரு பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தது.... சொன்னபடி இல்லாமல் முப்பது நிமிடங்கள் முன்னரே வந்து சேர்கிறது நிலவு....

மெல்ல மெல்ல இருள் கவ்வுகிற வேளையில், இங்க இவர்களுக்குள் ஒளி பரவ ஆரம்பிக்கிறது.. ஆம் ஓர் இனம் புரியா நட்பொளி....

******************************************************************
வட மேற்கு திசையில் ஓர் குடிசையிலும்,
மத்திய கிழக்கில் ஒரு மண் வீட்டிலும்,
ஒளியும் ஒலியும் உள்ளங்களை இணைத்துக் கொண்டிருக்கிறது.
பறவை "சொல்லுங்க" என்கிறது..!
நிலா "நலமா" என்று புன்னகைக்கிறது,
பதில் குயில் பாடுகிறது.........!!
******************************************************************

தொடங்கிய குரலில் மற்றொன்று முடிக்க,
அதை இன்னொன்று எடுக்க நிமிடங்கள் செத்துக் கொண்டிருந்தது
மூளையில் முளைக்கவில்லை...

குடும்பம் என்பான், கவிதை என்பான், கதை என்பான், நடை என்பான், வகை என்பான்.. அங்கங்கே நேசன் எட்டிப்பார்க்கிறார், பா ரா பாசம் பொழிகிறார், கடல் புறாவும் சிவாஜியும் சிறகுகள் விரிக்கின்றனர். இவைகளில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன முன்று உயிர்கள்...

மணி நள்ளிரவை தாண்டி வேகம் பிடிக்கறது.

தோள் சாயும் குயிலுக்கு அங்கே விடிகிறது
இருபத்தி ஆறாவது முறையாக அவர் உலகினை கண்ட தினம்...

அடடா என்ன ஒரு அழகிய தருணம்.. முதன் முதலில் இணைகிற மனங்கள், ஆயிரம் ஆயிரம் நிமிடகள் பழகிய உணர்வுகள், இவை அனைத்தின் ஒரு துள்ளலில் வழிகிறது வாழ்த்து... பிறந்த நாள் வாழ்த்து..

******************************************************************
ஒரு பக்கம் குயில்கள் நிக்கோடின் புகைகளுக்கு உயிரை கொடுத்துக் கொண்டிருக்கின்றன..
புகைகளும் புன்னகைகளும் ஒன்று ஒன்று சேர.,
இந்த பக்கம் நிலவுக்கு புரையேறிக் கொண்டிருந்தது ஆனந்தத்தில்..
******************************************************************

குயிலுக்கு பிடிமனம், பறவைக்கும் கவிமனம், நிலவிற்கோ அன்பின் பயணம்.

எத்தனை எத்தனை விவாதங்கள், பாசத்தின் பரிமாணங்கள் வழிந்து ஓடிக் கொண்டிருக்கிறது எங்கள் நட்பின் ஆழம்..!

வடிந்துக் கொண்டிருந்தது நொடிகள்..

அலை அலையாய் எண்ணங்களில் மிதக்கிறது எங்கள் இதயங்கள்.

அன்று கருவேல நிழலில் போடப்பட்ட பல முடிச்சுகளில் சில இன்று நேசத்தில் இறுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.....

பி.கு - இந்த உறவுக்கு வித்திட்ட தங்கை மஹாவின் அழை பேசி பிறந்தநாள் வாழ்த்துக்களும் தோள் சாயும் குயிலுக்கு சொல்லப்படுகிறது இந்த பதிவின் மூலம்...

39 comments:

dheva said...

ஒரு வார்த்தையில் சொல்லவா தம்பி....


லவ்லி......!


அருமையான நிகழ்வினை கவித்துவாமாய் வடித்து இருப்பதில் வாசிப்பாளனுக்கு கிடைக்கும் இன்பம் என்ன தெரியுமா? கடும் வெயில் குடி நீர் குளம் ஓரமாக கிடைத்த நிழல் மரம் தருமே.. அத்துனை குளிர்ச்சியான ஒரு நிறைவு....

நெஞ்சு நிறைவாய் இருக்கிறது தம்பி.. மீண்டும் மீண்டும் படிக்கிறேன்... வினோ....மீண்டும் சொல்கிறேன்...


லவ்லி....!

சீமான்கனி said...

வாழ்த்துகள் தோழர்களே...சந்திப்பு சுகமாய் இருந்திருக்கும்..ஆமாம் சும்மாவா...

DR.K.S.BALASUBRAMANIAN said...

அருமை!!!!!!!!!!!!!!!!
அருமை!!!!!!!!!!!

கவி அழகன் said...

ஆனந்த பரவசத்தில் பிரசவித்த படைப்பு அருமை நண்பா
வித்தியாசமான கவிபடைப்பு

க ரா said...

அருமை வினோ...

பாலா said...

கவிதை எழுதுவது எப்படி? ?!!
அதிலும் பிறந்த நாள் வாழ்த்தாய் கவிதை சொல்வது எப்படி?
இணைய ஆழிக்குள் எங்கிருந்தோ விழுந்த மின்சாரம் என்னுள்ளும் பாய்கிறது அன்பென .
தாயன்பு மீசை முளைத்த பின் அலுப்பாயும் , புலம்பளுமாயும் உணரலாம் !! எங்கிருந்து கிடைக்கப்பெறுவது என் சின்ன வலிக்கு கண்ணீர் விடும் பேரன்பை ,
தாயன்பை நட்பின் புனலில் கலக்கவிடும் பேரன்புகளுக்கு என்ன கைம்மாறு செய்ய ??
" அன்பிற்கு கைமாறாய் பெரிதாய் என்ன தருவது அன்பை தவிர" ( நன்றி நேசன் )
பிறந்த நாள் வாழ்த்துகள் முகமறியா நண்பனே (ஸ்ரீதர் )

கமலேஷ் said...

அட அட வினோ பின்னிடீங்க போங்க.

ஸ்ரீதருக்கு இதைவிட பெரிய பிறந்த நாள் பரிசு கிடைக்க வாய்க்காது என்றே தோன்றுகிறது.

கடந்து போன இரவை ஒரு அழகான சித்திரம் போல தீட்டியிருக்கிறீர்கள்.

அருமையாக வந்திருக்கிறது.

வினோ said...

நன்றி தேவா அண்ணே.. எல்லாம் நட்பு செய்யும் வேலை தான்..

வினோ said...

ஆமாம் சுகமான சந்திப்பு தான் சீமங்கனி.. மிகக் நன்றி

வினோ said...

நன்றி யாதவன்

வினோ said...

@ drbalas - நன்றிங்க

வினோ said...

நன்றி இராமசாமி கண்ணன்..

வினோ said...

thanks அன்பரசன்..

வினோ said...

இதுக்கு தான் பாலாவை கூப்பிடறது.. நன்றி கடல் புறா..

வினோ said...

கமலேஷ் இது நமக்கு ஒரு நல்ல தொடக்கமாகவே இருக்கும்...

சிவாஜி சங்கர் said...

வினோத் அண்ணே..
நட்பை ஏற்படுத்துவது ஆகச் சுலபம்..
தக்கவைப்பதுதான் ............ :)

உடலுதிர்த்து விடும் சிறகொன்றில்
பறவை எழுதுகிறது தன் நாட்குறிப்புகளை..!
பெருமழைக்கு கிளையொதுங்கிய
மழை ஸ்நேக பறவைகள்..
பறப்பதுவாயும்.., பின்ன பறப்பதுவாயும்
பிழைக்கும்
நீர் பறவை
மரங்கொத்தி
வண்ணத்துப்பூச்சியின்
வாழ்த்துகள்..
பிறிதோர் பறவைக்கு...!

(பிறந்த நாள் வாழ்த்துகள் ஸ்ரீதர் அண்ணே...!)

செல்வா said...

//சொன்னபடி இல்லாமல் முப்பது நிமிடங்கள் முன்னரே வந்து சேர்கிறது நிலவு....//

அட கலக்கல் அண்ணா ..!!

செல்வா said...

//ஒரு பக்கம் குயில்கள் நிக்கோடின் புகைகளுக்கு உயிரை கொடுத்துக் கொண்டிருக்கின்றன.. //

இதைய நிறுத்தவே மாட்டாங்களா ..?

"ராஜா" said...

கவித ... கவித ... வாழ்த்துக்கள் நண்பா .. உங்கள் கவிதை எழுதும் திறமைக்கு

"ராஜா" said...

நண்பனின் பிறந்தநாளை இப்படி கவி நடையில் யாரும் எழுதி நான் பார்த்ததில்லை .. இப்படி ஒரு நண்பன் கிடைக்க அவர் உண்மையிலேயே கொடுத்து வைத்திருக்க வேண்டும்

sakthi said...

arumaiyana vaalthu vino

வினோ said...

நன்றி சிவா.. கவிதை அருமை...

வினோ said...

நன்றி செல்வா...

அது எல்லாம் கொஞ்சம் கஷ்டம் செல்வா..

வினோ said...

நன்றி ராஜா...

வினோ said...

நன்றி சக்தி...

Unknown said...

///தோள் சாயும் குயிலுக்கு அங்கே விடிகிறது
இருபத்தி ஆறாவது முறையாக அவர் உலகினை கண்ட தினம்...

அடடா என்ன ஒரு அழகிய தருணம்.. முதன் முதலில் இணைகிற மனங்கள், ஆயிரம் ஆயிரம் நிமிடகள் பழகிய உணர்வுகள், இவை அனைத்தின் ஒரு துள்ளலில் வழிகிறது வாழ்த்து... பிறந்த நாள் வாழ்த்து..///

ஒரு பெரு மழையாய் உடைந்து சிதறும்
உங்கள் அன்பை சேகரிக்க
என் விழிகளையே பாத்திரமாக ஏந்துகிறேன்
ஆனால் ஏற்கனவே கண்ணீரால் நிரம்பி வழியும்
பாத்திரத்தை என்ன செய்ய வினோ,,,,,,,,,,,, நன்றி நண்பா.

பழகுவதற்கு பறவைகளாக இல்லாத உலகில்
இந்த குயிலுக்கு கூடல்ல === வானம் செய்து தந்துருக்கிறது வாழ்த்தின் மூலம் இந்த நிலா.

Unknown said...

பாலா//////
நன்றி பாலா

கமலேஷ்///
கண்டீப்பாக நண்பா இத விட எனக்கு ஒரு பெரிய வாழ்த்து இருந்ததும் இல்லை இருக்க போவதும் இல்லை.

சிவாஜி சங்கர்////
நன்றி சிவாஜி,,,, உங்களுக்கும் வினோவிற்கும் இருக்கும் நட்பு நாங்கள் பேசும் போதே தெரிந்தது.

"ராஜா"//////
நன்றி ராஜா,,, இது போன்ற நட்பு கிடைக்க நான் தகுதிவுடையவனா என்று எனக்கும் அவ்வப்போது தோனும்.

ஹேமா said...

பாரா அண்ணாவும் நேசனும் யாரையும் விட்டு வைக்கிறதில்ல.என்னையும்கூடத்தான்.சந்திக்கும் வாய்ப்பு மட்டும் எனக்குக் கிடைக்காது !

Riyas said...

நற்பை பற்றி மிக அருமையாக சொல்லியருக்கிறீர்கள்.. அழகான சொல்லாடல்கள்
வாழ்த்துக்கள்..

மோகன்ஜி said...

வினோ! வித்தியாசமான பரிமாணத்தில் உங்கள் பார்வை.. வாழ்த்துக்கள்

வினோ said...

/ ஒரு பெரு மழையாய் உடைந்து சிதறும்
உங்கள் அன்பை சேகரிக்க
என் விழிகளையே பாத்திரமாக ஏந்துகிறேன்
ஆனால் ஏற்கனவே கண்ணீரால் நிரம்பி வழியும்
பாத்திரத்தை என்ன செய்ய வினோ,,,,,,,,,,,, நன்றி நண்பா. /

நட்புக்கு நன்றி எதற்கு ஸ்ரீதர் ?

வினோ said...

கண்டிப்பா ஒரு நாள் சந்திப்பு நிழலும் ஹேமா..

அவுங்க இல்லாம எழுத முடியுமா?

வினோ said...

வந்தமைக்கு நன்றி ரியாஸ்

வினோ said...

நன்றிங்க மோகன்ஜி

தமிழ்க்காதலன் said...

வினோத்...., அசத்திட்டீங்க போங்க. உங்கள் எழுத்து மிக மெருகேறி இருக்கிறது. நல்ல நேர்த்தி தெரிகிறது. சிறப்பான நடை. வாழ்த்துக்கள். ம்ம்ம்ம்

logu.. said...

Romba arumai..

வினோ said...

@ தமிழ்க் காதலன் - நன்றி நண்பரே..

வினோ said...

@ logu - நன்றி நண்பரே...

Thoduvanam said...

நட்பு மிகப் பெரிய பலம் .தனிமையில் சொந்த பந்தம் எல்லாம் துறந்து அயல் நாட்டில்,எதிர்பார்ப்புக்கள் இல்லாத விழுதுகள்.நம்மைத் தாங்கிப் பிடிக்கின்ற தூண்கள் ..உங்கள் எழுத்துக்களில் மனம் மகிழ்ந்தேன் என் வாழ்த்துக்கள்