9 Sept 2010

கடலோர நடை பயணம் 2

கடலோர நடை பயணத்தின் முதல் நடை மிக நீளமான அருமையான  உணர்வாக அமைந்தது.  இந்த இரண்டாவது பயணம் கொஞ்சம் வித்தியாசமானப் பயணம். எப்படீன்னு நீங்க கேட்கிறது புரியுது.  

வாங்க நாம நடக்கலாம்...

போன ஞாயிறு Portrush என்கிற ஊர்ல, விமானக் கண்காட்சி நடந்தது. அதுக்கு  போக முடிவு செய்தோம்.

காலையில் 9.40க்கு புகைவண்டி. கொஞ்சம் கூட பொறுப்பில்லாம 9.10க்கு வரைக்கும் நான் கிளம்பல. அவசர அவசரமா கிளம்பிப் போனா! வண்டி வர சில நிமிடங்கள் இருந்தது. அப்ப தான் தோணிச்சு, கையில இருக்கிற காசு பயணச்சீட்டுக்கு பத்துமா? பத்தாதான்னு?. சரி, ரிஸ்க்க ரஸ்க்கா சாப்பிடுற பரம்பர இல்லையா, வண்டியில ஏறியாச்சு. அடுத்த நிறுத்தத்தில், வேற வண்டி மாறனும் அப்படின்னு சொன்னங்க. சரி கிடச்ச gapla காசு எடுக்க ஓடினேன். ஒலிம்பிக் தங்க மெடல் வாங்கிற வேகம். பாதி தூரம் போகும் போது தான் பார்த்தேன், வண்டி கிளம்ப மணி ஆச்சுன்னு.  நம்ம நண்பர் வேற என்னை அழைபேசியில் தேடுகிறார். பின்ன என்ன பண்ண, ரெண்டு மெடல் வாங்க அது விட வேகமா வண்டிக்கு வரதுக்குள்ள என் வயற்றில் இருந்ததெல்லாம் வாய் வழி எட்டிபார்க்க துடிச்சுது.

அப்புறம் காசு போதுமானதா இருந்தது. அங்க போனா, கண்காட்சி கண்றாவியை விட கன்றாவியா இருந்தது. நம்ம ஊர்ல நடக்கிறதே நல்லா இருக்கும்.

அதனால, அங்கிருந்து Londonderryக்கு போலாமுன்னு முடிவு. இங்க தாங்க நம்ம பயணம் தொடங்குது.    

Portrushலிருந்து Londonderryக்கு சுமார் 75 நிமிடங்கள் பயணம்.

இயற்கை  நமக்குத் தரும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது இல்லையா? போகும் வழியின் இருபுறமும் என்னை இழுத்து  போட்டு மனசில் படம் பிடிக்க வைத்தது இயற்கை.

ஒரு பக்கம் பச்சை பசேலுன்னு வயல்கள், விதைகளுக்கு காத்திருக்கும் வயல்கள். 

இன்னொரு  பக்கம் கடலும் அதன் மணலும் எங்க  எந்த இடத்தில் பின்னிக் கொள்கிறது என்று தெரியாத  அளவிற்கு  அப்படி  ஒரு அற்புதமான  பினைவுக் காட்சி.
    
விழி வழி விருந்து உட்கொண்டே போனது மனசு. 
நம்ம ஊட்டி  மலை  புகை வண்டி பாதையில குகைகள் வருமே அந்த மாதிரி  இந்த பாதையிலும் மூன்று  குகைகள். குகைகளுக்குள்ள என்ன அழகுனா, இந்த பக்கம் நம்மளோட பயணிக்கும் கடல், இருங்க நான் வந்திடுறேன்னு சில வினாடிகள் ஓய்வு  எடுக்க மறைந்து போகும் உணர்வு. 

இன்னொரு அழகும். நானும் உங்களை வரவேற்க தயார இருக்கிறேன்னு சொல்ல இருண்ட மேகங்களை பிழிய காத்திருந்தது வானம்.

இப்போ Londonderry பற்றி 

Northern Ireland எல்லை  பகுதியில்  இருக்கும் அழகோவியம். இதை தாண்டினால் Ireland வந்துவிடும். 

அடர்த்தியான வீடுகள், குறுகிய சாலைகள்,  மேற்கத்திய நகரங்களுக்கே உரிய  நகர் அமைப்பு. கடலை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் உலக வரைப்படத்தில்  ஒரு குட்டிப் புள்ளி. 

இந்த  ஊரை  சுற்றி  கோட்டை  மதில்  சுவர் கட்டி இருக்குங்க. சுமார் 2kms சுற்றளவு. நகரின் மையப் பகுதிகளை சுற்றி கட்டப்பட்டுள்ளது. நாங்க சுமார் ஒரு மணி நேரம் புகைப்படங்களுக்கு  தீனி போட்டுக் கொண்டே சுற்றி வந்தோம்.  இந்த மதில் சுவரை சுற்றி வருவதே ஒரு காதல் வயப்படும் உணர்வு. எத்தனை எத்தனை மனிதர்கள்? இளையவர்கள் முதல் வயதானவர்கள் வரை, அன்பை காட்ட ஒரு அருமையான இடம்.

இயற்கை அன்னை எனக்களித்த அமிர்தத்தின் ஒரு துளியை புகைபடங்கள் வழியே புசித்துக் கொண்டே நடந்தோம். மாலை வேளையில் வானம் மெல்ல தன்  அன்பு துளிகளை தூவ.. 
அற்புத விடியல்கள் ஒவ்வொரு துளிகளிலும்...
ஒரு நதிக்கரையோரம்  பறக்க  சிறகு  விரித்தது மனசு. அதனுடன்  நடக்க தயாரானது  கால்கள். 

இப்படியும் நம் உலகத்தை சுவாசிக்கலாம்....

25 comments:

பாலா said...

ம்ம் அனுபவிங்க நண்பா

ஹேமா said...

படங்களும் பயணமும்
மிக மிக அழகு விநோ.

ஜெயந்த் கிருஷ்ணா said...

பார்க்க தூண்டும் பயணக்கட்டுரை... கண்ணுக்கு குளிர்ச்சியான படங்கள்... அருமை நண்பா...

கவி அழகன் said...

அழகான கட்டுரை அழகான படங்கள் வாழ்த்துக்கள்

Chitra said...

Beautiful place! Very nice photos!

Thank you for this post!

KUTTI said...

VINO,

PLACES ARE REALLY NICE.

PHOTOS ALSO SWEET.

WILL MAIL YOU LATER

MANO

சிவாஜி சங்கர் said...

அழகான பயணம்.. கூட வந்தாப்புல இருந்தது...!!

செல்வா said...

கொடுத்து வச்சவர் அண்ணா நீங்க .. இவ்ளோ அழகான இடங்களா ..?
அதிலும் அந்த மூணாவது போட்டோ எப்பா என்ன அழகு ..?!?
நீங்க எழுதினது நல்லா இருக்கு .. அனுபவிங்க ..!!

செல்வா said...
This comment has been removed by the author.
வினோ said...

நன்றி பாலா..உங்கள போல அடுத்து கப்பல் பயணம் தான்.

வினோ said...

மிக்க நன்றி ஹேமா. படங்கள் எடுக்க கற்றுக் கொண்டிருக்கிறேன்.

வினோ said...

வாங்க ஜெய்...நன்றி நண்பா

வினோ said...

வாங்க யாதவன்..நன்றி நண்பரே

வினோ said...

Thanks Chitra...:) Anytime

வினோ said...

Thanks Mano.. will get u more pics..

வினோ said...

நான் போனா நீங்க போன மாதிரி தானே சிவா ...

வினோ said...

செல்வா அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை. வாய்ப்பு இருக்கு அது தான்...

Unknown said...

அன்பின் தம்பி,
சில நாட்களாய் அனைத்து பதிவுகளையும் படிக்க முடியவில்லை.. ஒரே நேரத்தில் மூன்று வெவ்வேறு projects அதனால் நாக்கு தள்ளுது.. கூடிய விரைவில் மீண்டு வருவேன்.. பிகசாவில் படங்களைப் பார்த்தேன்.. நிறைய படங்கள் நன்றாக இருக்கிறது ...
என் பதிவுகளில் பயன்படுத்திக்கொள்கிறேன் ....

வினோ said...

நன்றி அண்ணே...

அம்பிகா said...

புகைப்படங்கள் அத்தனையும் அழகு.

வினோ said...

@அம்பிகா, வாங்க சகோ.. நலமா? மிக்க நன்றி ரசித்தமைக்கு...

அன்புடன் மலிக்கா said...

படங்களும் பயணக்கட்டுரையும் மிக அருமை..

/நிலவின் மடியில்/
வலையின் தலைப்பு சூப்பர்..

http://niroodai.blogspot.com/

வினோ said...

@ மலிக்கா, மிக்க நன்றி சகோ

Riyas said...

அழகான பயணம்..

http://riyasdreams.blogspot.com/2010/09/blog-post_12.html

வினோ said...

@ Riyas, மிக்க நன்றி நண்பா