15 Sept 2010

வீடும் என் சமையலும் - 1


உடுத்த உடை
உண்ண உணவு
இருக்க இடம்...

தினம் தினம் நடக்கும், புழங்கும், பழகும், கடக்கும் பல தரப்பட்ட விசயங்களில் ஊட நம் வாழ்க்கை. முக்கிய விசயங்களான வீடும்,  சமையல் என்ற பெயரில் நான் அடிக்கும் கூத்துமே இந்த பதிவு...

நான் இப்போ குடிபுகுந்திருக்கிற வீடு, 64 வீடுகள் கொண்ட  நாலு அடுக்கு  மாடி கட்டிடத்தில் முதல்  மாடியில்  உள்ளது... கட்டிடத்தின் பின்புறம் மரத்திலான அழகான நடைமேடை, குட்டி குட்டி பூந்தோட்டம், குழந்தைகள் (என்னை மாதிரி) துள்ளி திரிந்து சிறகு விரிக்க விசாலமான இடம், வண்டிகளுக்கு தனி இடம் என்று சகல வசதிகளை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் குடியிருப்பு. அதில், ஒரு படுக்கை அறை கொண்ட ஒரு வீட்டை என்னை நம்பி ஒப்படைத்திருக்கிறார் வீட்டின் முதலாளி (அவருக்கு கொஞ்சம் நிறைய தைரியம்... என்ன பண்ண).

வாங்க வீட்டைச் சுற்றிப்பார்க்கலாம்..

ஒரு சாயலில் Studio Apartment முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரவேற்பறையும், சமையலறையும், சாப்பிடும் இடமும் ஒரே அறையில் தடுப்பு இல்லாமல் சேர்ந்தாற்ப்  போலவும், மற்ற அறைகள் தனித்தனியே அமைந்துள்ளது. இந்த மாதிரி வடிவமைப்பு எனக்குப் புதுசு... 

    சன்னல் இடை
          சில்லென காத்து
                சின்ன பயல பாத்து
                       சிங்கார பாட்டு
                             சிற்றோடை மனசு
                                      சீட்டாட்டம் போடுதே! 

நீங்களே பாருங்க சன்னல் வழியே...                  ஆமாங்க, இந்த பதிவுக்கு விதையே இந்த பெரிய கண்ணாடி சன்னல் தாங்க... எழில் கொஞ்சும் அந்த  வரப்பிரசாதத்தை. விழிகளில் தவழும் இயற்கையின் புன்னகைகளை என்னின் ஒவ்வொரு அணுவிற்கும்   புகட்டிக் கொண்டிருக்கும் கவிதைகளே இந்த சன்னல்......

மெலிதாய் தன் பின்னிடையைக் காட்டும் வீடுகள், அதையும் தாண்டி  தன் வனப்பை வளித்து படுத்துக்கொண்டிருக்கும் மலை, அதனை பச்சை வண்ண பட்டுத் துணியால் போர்த்தியது போன்ற பசுமை நிறைந்த  காடுகள்... விழிகளை கொள்ளைக் கொள்ளும் பரிசுகள்... 

அங்கிருந்து பார்த்தால், தனிமையில்  அமர்ந்திருக்கும் மரபெஞ்ச் நமக்குப் பல கவிதைகளை கொட்டும்...                    மழை  குடிக்கொண்டிருக்கும் நாட்களில் சன்னல் கண்ணாடிகளில் வலம் வரும் துளிகளில் பயணிக்கிறது மனசு... 
அது ஒரு கார் காலம் கண்ணே... 

தனிமையொத்த நிமிடங்களில் சன்னலில் தலை சாய்ந்துக்  கொண்டிருக்கிறது மனசு... 

அப்படியே இந்த பதிவை படிக்கும் மனதோடும் உறவாடிக் கொண்டிருக்கிறது..

29 comments:

பா.ராஜாராம் said...

மூசு மூசென எல்லாம் வாசித்தேன்.

out of focous-டா நாங்கள். :-)

எழுது வினோ.

Chitra said...

Enjoy ....!!!

ஜெயந்த் கிருஷ்ணா said...
This comment has been removed by the author.
ஜெயந்த் கிருஷ்ணா said...

காதலையும் காத்திருப்புகளையும் கவிதைகளாக சொல்லலாம்... அது போன்றே வீட்டை பற்றியும் வீட்டை சுற்றியும் கவிதை கலந்த நடையோடு கூறிய விதம் அருமை நண்பரே...

கவி அழகன் said...

உங்க்கள் படைப்பை பார்த்தவுடன் எனக்கு ஒரு கவிதை வந்துவிட்டது
உங்கள் படைப்பின் தாக்கம் நன்றி
அருமையான படைப்பு
புத்துணர்ச்சியான படைப்பு

யன்னல் வழி கண்கள் பார்க்க
காதல் வரி தானாய் கொட்ட
கவிதையான மாயமென்ன
மனதை தொட்ட காதலென்ன

சாரல் துளி எட்டிபார்க்க
யன்னல் கதவு தானாய் மூட
நெஞ்சை மூடி வைப்பதென்ன
கன்னமிட்டு பார்பதென்ன

தன்னந் தனி தனிமையிலே
சின்னவிழி பூங்குயிலே
சிளிர்த்து விட்டு போவதென்ன
நான் சித்தனாய் போனதென்ன

"ராஜா" said...

நல்லா enjoy பண்ணுங்க நண்பரே ....

செல்வா said...

வீடு அழகாத்தான் இருக்கு .. எப்படியோ வாழ்க்கைய நல்லா அனுபவிக்குறீங்க .. வாழ்த்துக்கள் ..!!

Anonymous said...

வீடு அருமை வினோ..
எழுத்து நடையும்

பாலா said...

உங்க பீலிங் புரியுது நண்பா

sathishsangkavi.blogspot.com said...

அனுபவீங்க.. அனுபவீங்க....

ஹேமா said...

யன்னலை எப்போதும் அகலத் திறந்துவிடுங்கள் விநோ.சுத்தமான காற்றும் சத்தமில்லாக் காதலும் வந்து உங்களோடு உறவாட !

முனியாண்டி பெ. said...

வீடும் கவிதையும் அழகயிருக்கு. மலையை பெண்ணாக பார்த்தாது அழகு.

அன்பரசன் said...

Enjoy!

வினோ said...

அப்பா கச்சேரியா?

வினோ said...

சித்ரா - நன்றி சகோ

வினோ said...

ஜெய் நன்றி நண்பா...

வினோ said...

யாதவன் - கவிதை அருமை.. மிக்க நன்றி..

வினோ said...

நன்றி ராஜா

வினோ said...

வா செல்வா.. யன்னல் மற்றும் மரபெஞ்ச் தான் இந்த வீட்டை அறிமுகப்படுத்தியது..

வினோ said...

நன்றி பாலாஜி...

வினோ said...

ஒரே பீலிங் தான் பாலா...

வினோ said...

நன்றி சதீஷ்..

வினோ said...

கண்டிப்பா ஹேமா... காதலுக்குரியவர்களுக்கு காத்திருக்கிறேன்...

வினோ said...

வாங்க முனியாண்டி... நன்றி

வினோ said...

நன்றி அன்பரசன்...

Thenammai Lakshmanan said...

வீடும் நம்முள் உறைந்த உணர்வு என நானும் உணர்ந்திருக்கிறேன் வினோ.. அருமை..

வினோ said...

@ தேனம்மை லெக்ஷ்மணன்
மிக்க நன்றி சகோ....

KUTTI said...

SUPERB BOSS.. .


WRITE MORE...


MANO

வினோ said...

நன்றி மனோ...