நீல மங்கை கைகோர்த்து நடந்து பழக கற்றுக்கொடுத்து, கூட நடந்த தருணங்கள்.. இவையே இனி...
இங்கிருந்து (Belfast) சுமார் 20 கீ.மீ. தூரம் போனால் ஒரு சின்ன தீவு மாதிரியான ஊரு (Bangor). அங்கே தாங்க இந்த நடைப்பயணம்.. Bangor பற்றி அடுத்த பத்தியில் பார்ப்போம். ..
இப்போ அங்கே போன அனுபவத்தை..
திங்கள் காலை சுமார் 10.30 மணிக்கு புகை வண்டிப் பிடித்தோம்..
ஒரு மணி நேர பயணம். நம்ம ஊரு பேரூந்து மாதிரி, வண்டியில் ஏறிய பின் தான் பயணச்சீட்டு வாங்க முடியும். ஏன்னா இங்கே ஏறிய நிலையத்தில் யாரும் இருக்க மாட்டாங்க. ஏதும் இல்லை நடைமேடைத் தவிர. ஒரு நாள் பயணச்சீட்டு வாங்கிட்டு வண்டியில் அமர்ந்தோம்.. என்ன அருமையான வண்டி… நம்ம ஊரு மூன்றாம் ஏ சி கூட இப்படி இல்லைங்க. சுத்தம், பஞ்சு இருக்கைகள், சத்தம் இல்லா , ஆட்டம் இல்லா பயணம்.. அப்படியே இயற்கையை ரசிச்சிக்கிட்டுப் போனோம்.. வழிமுழுவதும் கடலோரமா தான் போனது வண்டி.
Bangor ஒரு சின்ன தீவு மாதிரியான ஊர். சொகுசு படகுகள் வாங்கி விடுமுறைகளை பொழுது கழிக்கும் மக்களும், அவர்களின் படகுகளும் காலம் போக்கும் இடம். அழகிய இடம்..
Bangorல் இருந்து ஒரு 6கீ.மீ. கடலோர சுத்தமான நடைபாதை, எந்த சத்தமும் இல்லை, கடலின் இசையைத் தவிர..
காலையில சரியா சாப்பிடலை.. அதனால கொஞ்சமா ( ஒரு முழு ப்ரைய்டு கோழி, 18 சிப்ஸ் பாக்கெட்ஸ், இப்படி ஒரு 2000 ரூபாய்க்கு) சாப்பிட வாங்கிட்டு நடக்க ஆரம்பிச்சோம்...
நகரத் தன்மையிருக்கிற இடங்களைத் தாண்டி பாதையை பிடிச்சு தனிமை நிறைந்த நிழல் கிடைக்கவும், கோழி கூவுறது கேட்க, சாப்பிட அமர்ந்தோம். வாங்கிட்டு வந்ததுல பாதியை காலிப் பண்ணிட்டு, திரும்பவும் நடக்க ஆரம்பித்தோம்.
இங்க நம்ம நண்பர் சூரியன் பற்றியும் சொல்லணும். அவருக்கு என்ன தோணிச்சோ, மக்க நாள் முழூவதும் எங்களுக்கு உடம்பு சுடாத தரிசனம் தந்தாரு. அதனால
வருண பகவானுக்கு Holiday.
பல வகை படகுகள் வளம் வருவதை பார்க்கும் அழகே அழகு. கால் நனைக்கும் வயதான மனிதர்கள், துள்ளி குதிக்கும் இரண்டு வயது குட்டி பாப்பா, தனிமை விரூம்பிகள், காதல் கதை பேசும் ஜோடிகள், தன் குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண், துடுப்பு படகு ஓட்டும் சின்ன பெண், அவளை ஆர்வத்துடன் பார்க்கும் அப்பா, கொஞ்சம் கவலையுடன் பார்க்கும் அம்மான்னு, இப்படிப் பல காட்சிகளுடன், பல தரப்பட்ட முகங்களுடன் எங்கள் நடை.....
இதுல ஒரு விஷேசம்... அனைவரும் வணக்கமும், புன்னகையும் நமக்கு தந்து விட்டுத் தான் போவார்கள்.. எத்தனை எத்தனை புன்னகைகள். இதுவல்லவோ எங்கள் சத்து 6 கீ.மீ. நடைக்கு..
இன்னொரு விஷயம்.. எத்தனை விதமான மனிதர்களைப் பார்க்க முடிகிறதோ, அத்தனை விதமான செல்ல பிராணிகளையும் பார்க்கலாம்.. அனைத்தும் நல்ல பயிற்சி பெற்றவை.. (எதுவும் செய்யல எங்களை).
வசீகரம் குறையா கன்னிப் பாவையின் அத்தனை நளினங்களும் தந்தாள் இந்த நீல மங்கை எங்கள் நடை பயணத்தில்..
வளைந்து, நெளிந்து, நின்று, நிமிர்ந்து, ஏறி, இறங்கி, குலுங்கி, குறுகி, இப்படி பலப் பல நளினங்கள்.. எங்களுக்கு விருந்து படைத்தாள் தண்ணீர் அரசி ..
ஆட்டம், பாட்டம், ஓட்டம், நடை, களைப்பு, தூக்கம், சிரிப்பு, கைதட்டல் இப்படி மாறி மாறி பொழிந்த வண்ணம் தொடர்ந்தது எங்கள் பயணம்..