24 Jul 2010

கவிதை அரங்கேறும் நேரம்

நெடுந்தூரப் பயணம்
நெஞ்சில் மலரும் தாளம்

அறநூறு நிமிடங்கள்
ஆறாயிரம் நிகழ்வுகள்
ஆறு கோடி உணர்வுகள்
ஆராத நினைவுகள்

நாலு மணி
நாணூறு ஆண்டுகளாய்....

நீ
தோள் சாய்ந்த நேரம்
சுகராகம் சுயம்வரம்
வாசித்துக் கொண்டிருக்கிறது
என் இதயத்தில்....

ஆறு மணி
அறுபது நொடிகளாய்.....

காகித பூ அழகில்
காய்ந்த சருகு வாசத்தில்
கலங்கி போன
மனங்களுக்கு அன்று
பரிமாற்றம் அரங்கேறியது...

வார்த்தைகள் அடுக்கி
வாக்கியங்களாய் மாற்றி
அங்காங்கே நமக்குள்
சிதறிக்கிடந்த -
முகங்களை வெளிக்கொணர்ந்தோம்...

உன் விழி நீரில்
கசியும் என்னையும் என்
விழி வழி மௌனத்தில்
சுவாசிக்கும் உன்னையும்
உணர்ந்து கொண்டோம்!

நாம் கடந்து பாதையில்
தங்கிவிட்ட நிஜங்களின் நிழல்கள்
உள்ளத்தில் வடிக்கப்படுகிறது
உதிரத்தில் புணைந்துவிடுகிறது...  

ஈரைந்து மணி காலங்கள்
எங்கிருந்தோ
ஒலியோசை
மிதந்து வருகிறது......

உன்னுடன் நான் இருந்த
ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும்
மறக்காது கண்மணியே....

4 comments:

Karthick Chidambaram said...

//“உன்னுடன் நான் இருந்த
ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும்
மறக்காது கண்மணியே....”//
உருக்கம்

வினோ said...

நன்றி கார்த்திக்

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமை நண்பா...

ஒவ்வொரு வரியும் உருக்கமாக உணர்வுகள் சொல்கின்றன..

வினோ said...

@ வெறும்பய - நன்றி நண்பா...