விழுந்த பின்
மேலெழும்பும் குமிழிகளாய்
எரிந்துக் கொண்டிருக்கிறது
பல நடுநிசி இரவுகள்
முத்தமிடுகின்றன
முன் ஜென்மத்தின்
நினைவுகளில் சில பகுதி
விரிக்கும் பட்சிகள்
அலகுகளில் மேவ
புகைக்கும் தருணம்
மனம் கிழிக்க
வந்த மர்கிறது
கிழிக்கப் படாத
காகிதம் ஒன்று
கோடி யாயினும்
புதிதாய் மையொழுகும்
நாமத்தின் வடிவாய்
கையெழுத்து பிரதியில்
அவன் சொல்லி
என்னுள் கொள்ளி
ஈராறு நாளில்
அட...
போனது போகட்டும்
விரியும் வாழ்க்கை
ஐந் தாறு நாளில்!
42 comments:
//முத்தமிடுகின்றன
முன் ஜென்மத்தின்
நினைவுகளில் சில பகுதி//
நல்லா இருக்குங்க வினோ
நான்தான் முதலா ..?
//அட...போனது போகட்டும்விரியும் வாழ்க்கைஐந் தாறு நாளில்!//
விரியட்டும் விரியட்டும் ..!!
நல்லா அனுபவிச்சி எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
நண்பா எனக்கு உண்மையில் இக்கவிதையின் பாடுபொருளை புரிந்து கொள்ள முடியவில்லை. சமயமிருந்தால் விளக்குங்கள்...
நல்லா இருக்கு..
கிழித்துப்போட வாய்ப்பளிக்காத சந்தர்ப்பங்களால் நிரப்பப்பட்ட காகித படிவங்கள் மனசில் உரசிப்போகின்றன சில தீப்பொறிகளை,,
அபாரம் வினோ
கவிதை அருமை.
ஒரு சிறு பிழை.
//வந்த மர்கிறது//
இடைவெளி இருப்பதால் அர்த்தம் வரவில்லை.
//அவன் சொல்லி
என்னுள் கொள்ளி
ஈராறு நாளில்//
அருமை. வாழ்த்துக்கள்.
அருமையான வரிகள்!
சிறப்பான கவிதை!
வாழ்த்துக்கள்!
நல்லா இருக்கு வினோ..
அருமை வினோ
உங்க கவிதையில ஏதோ அர்த்தம் இருக்குன்னு தெரியுது ஆனா என்ன அர்த்தம்னுதான் புரியல...
நன்றி தினேஷ்..
நன்றி செல்வா..
நன்றி யாதவன்...
ஆமா கே ஆர் பி அண்ணா, அப்படி தான் இருக்கு இப்போ..
நன்றி ஜெய்...
@ வருணன் - நண்பா, ஒரு கடிதம் கையில் இருக்கு, கிழித்துப்போட மனசு சொல்லுது, ஆனா, முடியல :( அதுக்கு தான்...
நன்றி சக்தி...
நன்றி மதுரை சரவணன்..
நன்றி எஸ் கே
நன்றி பாலாஜி...
நன்றிங்க காமராஜ் அண்ணா
நாம பேசுவோம் ராஜா..
உங்கள் கிழிக்கப் படாத காகிதம் கிழித்த என் மனப் பக்கங்கள் அதிகம் வினோ. புரட்டிப் போடும் ஞாபகங்களில்.... துளிர்த்திருக்கும் விழிகளில்.... உன் வரவுக்கான காத்திருப்புகள்...!!
//விழுந்த பின்
மேலெழும்பும் குமிழிகளாய்
எரிந்துக் கொண்டிருக்கிறது
பல நடுநிசி இரவுகள்
முத்தமிடுகின்றன
முன் ஜென்மத்தின்
நினைவுகளில் சில பகுதி
//
என்னைய மாதிரி பயப்படுற அப்பாவிகளுக்கு திகிலக் கிளப்பாதீங்க..
//விழுந்த பின்
மேலெழும்பும் குமிழிகளாய்
எரிந்துக் கொண்டிருக்கிறது
பல நடுநிசி இரவுகள்
முத்தமிடுகின்றன
முன் ஜென்மத்தின்
நினைவுகளில் சில பகுதி
//
என்னைய மாதிரி பயப்படுற அப்பாவிகளுக்கு திகிலக் கிளப்பாதீங்க..
விரைவில் சந்திப்போம் தமிழ்க் காதலன்...
அப்படியெல்லாம் இல்லைங்க Sriakila
வணக்கம் வினோ
எங்க ஆளையே காணாம் எங்கேருக்கிங்க வினோ ........
இனிய தீபவொளி திருநாள் வாழ்த்துக்கள்
வினோ..சுகம்தானே.
கவிதை அற்புதம்.அனுபவித்துப் பின் சலித்துப் பின் மனதைச் சமாதானப்படுத்திக்கொண்ட வரிகள்.
நல்லா இருக்கு வினோ.
நன்றி தினேஷ்... இந்தியா போயிருந்தேன்..
சுகம் ஹேமா... நீங்கள் சுகம் தானே?
நன்றி ஜெயா...
ஃஃஃஃகோடி யாயினும்
புதிதாய் மையொழுகும்
நாமத்தின் வடிவாய்ஃஃஃஃ
அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்..
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
mathisutha.blogspot.com
“கிழிக்கப்படாத காகிதம் ஒன்று“ தலைப்பிற்கேற்ப கவிதை வரிகளும் அருமை.
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
நன்றி ம.தி.சுதா...
நன்றி இந்திரா...
நல்லா எழுதி இருக்கீங்க....
ரசித்தேன்
Post a Comment