மழை துளிகளில்
கலைக்கப்படும்
குள அலைகள்
மோதும் இருகரைகளில்
அமர்ந்திருக்கிறது துடிக்கும்
மனமிரண்டின் கால் தடங்கள்...
அவள்
அவள்
ஏக்கம் பேசும் விழிகள்
சுமக்கும் காகித கப்பல்
மேலும் கீழும் புதைய
கரை சேருமோ
சுரந்து மிதக்கிறது பதற்றம்
இப்பொழுது
பெற்றவள் அப்பா என்கிறாள்
பெற்றவன் அம்மா என்கிறான்
தேவை ஒன்றாகிறது
இருவருக்கும்...
35 comments:
இங்கு வார்த்தைகள் தேவையாயிருக்கிறது வினோ.சஞ்சலங்கள் சூழ்ந்திருக்க சுரமிழந்த நிலையில் இரு உயிர்களோ !
//பெற்றவள் அப்பா என்கிறாள்
பெற்றவன் அம்மா என்கிறான்
தேவை ஒன்றாகிறது//
சூப்பர்.
//சுரந்து மிதக்கிறது பதற்றம்//
எங்க இருந்து தலைவா இப்படி பிடிக்கிறீங்க.. அருமை :)
சுமக்கும் காகித கப்பல்
மேலும் கீழும் புதைய
சுப்பர் வரிகள்
கடைசி பந்தி பல பொருள் காட்டி நிக்கிது
உங்கள் கவி நடை சிந்திக்க வைக்கிறது
இரு கரைகளில் அமர்ந்திருக்கும் துடிக்கும் இரு மனமிரண்டின் கால்தடங்கள்....கனமாய் விழும் மழைத்துளிகளால் கலைக்கப்படும் குள அலைகளாய் மோதப்படுகிறது...
கனமாய் விழும் மழைத்துளிகளுகள் இவர்களின் நினைவைத்தாங்கி வந்து விழுந்து அலையாய் கலையுமோ.....?
சுரந்து மிதக்கும் பதற்றம் எப்படி வாசிப்பாளனுக்குள்ளும் பரவிவிடுகிறது தம்பி..?
விளித்தலில் வித்தியாசப்பட்டாலும் தேவை ஒன்றுதான்.....!
மிகக்கடினம் உணர்வுகளுக்கு விளக்கவுரை எழுதுவது... அதை விட கடினம் அந்த கவிதைக்கு கருத்து சொல்வது. உன் கவிதையில் நான் நிறைந்து இருக்கிறேன்...மேலும் இயன்றவரை வார்த்தையாக்க முயன்றிருக்கிறேன்.....தம்பி...!
///அவள்
ஏக்கம் பேசும் விழிகள்
சுமக்கும் காகித கப்பல்
மேலும் கீழும் புதைய
கரை சேருமோ
சுரந்து மிதக்கிறது பதற்றம்
//
இந்த வரிகள் கலக்கல் அண்ணா ..!!
மனதை கனமாக்கிய கவிதை
சுரந்து மிதக்கிறது பதற்றம்
இச் சொல்லாடல் நல்லாயிருக்கு வினோ
தம்பி கவிதை உங்களுக்கு மிக அழகாக கைவருகிறது ... பாராட்டுக்கள்..
மிக நீண்ட நேரம் குளக்கரையின் கால் தடங்கள் மீது நின்றிருந்தேன் ...
மெருகேறிய எழுத்துக்கள்... மெதுவாக நுழைகிறது மனதில்... வெளியேறத் தெரியாமல் துடிக்கின்றன வார்த்தைகள்.. கூடவே நானும்...
நண்பரே கவிதை அருமை ... நான் நிறைய முறை படிக்க வேண்டி இருக்கிறது உங்கள் கவிதையின் அர்த்தம் புரிந்தது கொள்ள ... ஆனால் புரிந்தவுடன் பிறந்து அடுத்த கணம் அழிந்து விடுகிறது உங்கள் மேல் வரும் பொறாமை
//குள அலைகள்
மோதும் இருகரைகளில்
அமர்ந்திருக்கிறது துடிக்கும்
மனமிரண்டின் கால் தடங்கள்...//
ரசித்தேன் அழகு வரிகள்...
இனிக்க நினைக்கும் தோழமையே.., வணக்கம்.
விழி வழி பயணிக்கும்......வாழ்க்கை.
விழிபிதுங்கும் நினைவுச் சுமை..!
கனத்துக் கிடக்கும் நினைவுகளின் சுமைத் தாங்கா
காகித கப்பல்.....!! நினைவைப் போலவே
முன்னும் பின்னும் நிழலாட்டம்.....!!,
நிகழ்காலம் மூழ்கி..., இறந்தகாலம் மிதக்கச் செய்யும்
நினைவுக் கப்பல்.
ஓற்றையடிப் பாதையில்.....
இரட்டை கால்தடங்கள்.... இணையாய்..!!
தோழா......., ஈரம் சுமக்கும் நெஞ்சம்...
எழுத்து மறைக்கும் கண்ணீ ர்...!!
இவைகளோடே விடை பெறுகிறேன்.
நன்றி நல்ல கவிதைக்கு.
சில நேரங்களில் தனிமை வார்த்தைகளாய் தான் வெளி வருகிறது ஹேமா...
நன்றி அன்பரசன்
நன்றி பாலாஜி...
நன்றி யாதவன்...
ஆம் தேவா அண்ணே.. பல விசயங்கள் இன்னும் உள்ளே சுவாசித்துக் கொண்டிருக்கிறது..
@ Selva - நன்றி தம்பி
நன்றி சக்தி..
மிக்க நன்றி K R P அண்ணே..
நன்றி வெறும்பய
நன்றி ராஜா...
வாங்க சீமான்கனி.. மிக்க நன்றி
நன்றி தமிழ்க் காதலன்...
ஆழமான கவிதை...... ஒவ்வொரு வரியும் - அருமையாக இழைக்கப்பட்டு இருக்கிறது.... பாராட்டுக்கள்!
குளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது மனசு வினோ
நன்றி சித்ரா...
@ தேனம்மை லெக்ஷ்மணன் - மிக்க நன்றி
//பெற்றவள் அப்பா என்கிறாள்
பெற்றவன் அம்மா என்கிறான்
தேவை ஒன்றாகிறது//
இந்த வரி ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு நண்பரே..
//அவள் ஏக்கம் பேசும் விழிகள்சுமக்கும் காகித கப்பல்மேலும் கீழும் புதைய கரை சேருமோசுரந்து மிதக்கிறது பதற்றம் இப்பொழுதுபெற்றவள் அப்பா என்கிறாள்பெற்றவன் அம்மா என்கிறான்தேவை ஒன்றாகிறதுஇருவருக்கும்...//
கவிதை நல்லா இருக்குங்க.
பாராட்டுக்கள்..
வா பா கமலேஷ்...
மிக்க நன்றி ஜிஜி...
அழகான வார்த்தைகள்...
@ சௌந்தர் - மிக்க நன்றி...
Post a Comment