ஒரு மழை துளி - சிந்திய
துகள்களின் முகைகளில்
அவள் -
உதறிய
புன்னகையின் (ஜ)சரிகைகள்
புகைப்பட பிக்ஸ்சல்களாய்
எதிர்ப்பார்பின் ரகசியங்கள் தித்திக்கும்
ஓர் அந்தியில் ஜனனித்த
அவள் -
காலடி காட்சிகளில்
கூட்டல் பெருக்கல் கற்கும்
துள்ளிய மானின் சில புள்ளிகள்
முரசு கொட்டி
முப் பணிரெண்டு பௌர்ணமிகளில்...
அவள் - விதைத்த
ஆனந்தத்தின் வலியிலும்
வலியின் ஆனந்தத்திலும்
நிலவின் மடியில்(ன்)
யாசிப்பு பிரபஞ்சம்...
துண்டு துண்டாய்
சிதறிக் கிடக்கும் (என்)
இயமப் பிறழ்வுகளில்
அவள் -
நியமப் புணர்வுகளுள்
வழிந்து நனைக்கும்
யாழின் அரங்கேற்றங்கள்
பின்னொரு நாளில்!
துகள்களின் முகைகளில்
அவள் -
உதறிய
புன்னகையின் (ஜ)சரிகைகள்
புகைப்பட பிக்ஸ்சல்களாய்
எதிர்ப்பார்பின் ரகசியங்கள் தித்திக்கும்
ஓர் அந்தியில் ஜனனித்த
அவள் -
காலடி காட்சிகளில்
கூட்டல் பெருக்கல் கற்கும்
துள்ளிய மானின் சில புள்ளிகள்
முரசு கொட்டி
முப் பணிரெண்டு பௌர்ணமிகளில்...
அவள் - விதைத்த
ஆனந்தத்தின் வலியிலும்
வலியின் ஆனந்தத்திலும்
நிலவின் மடியில்(ன்)
யாசிப்பு பிரபஞ்சம்...
துண்டு துண்டாய்
சிதறிக் கிடக்கும் (என்)
இயமப் பிறழ்வுகளில்
அவள் -
நியமப் புணர்வுகளுள்
வழிந்து நனைக்கும்
யாழின் அரங்கேற்றங்கள்
பின்னொரு நாளில்!
27 comments:
மொழி அழகு.. உங்களின் ரசனையும்...நல்ல கவிதை வினோ...
கவிதை அழகு.
வாவ் அழகு !!!!
கவிதை வரிகள் அனைத்தும்!!!!
//ஆனந்தத்தின் வலியிலும்
வலியின் ஆனந்தத்திலும்...
அருமை நண்பரே ... வழக்கம் போல கலக்கல் ...
வணக்கம் வினோ
"பின்னொரு நாளில் முடிவில்லா கவிதை"
தலைப்பு மிக அருமையாக உள்ளது நண்பரே
//அவள் -
காலடி காட்சிகளில்
கூட்டல் பெருக்கல் கற்கும்
துள்ளிய மானின் சில புள்ளிகள்//
இந்த வரிகள் கலக்கல் அண்ணா .,
நல்லா இருக்கு ..!!
super!
கவிதை மிக அழகு வினோ
//முரசு கொட்டி
மூப் பணிரெண்டு பௌர்ணமிகளில்...
அவள் - விதைத்த
ஆனந்தத்தின் வலியிலும்
வலியின் ஆனந்தத்திலும்
நிலவின் மடியில்(ன்)
யாசிப்பு பிரபஞ்சம்...//
அழகு வரிகள் வினோ ரசனையை...ரசித்தேன்...வாழ்த்துகள்....
துகள்களின் முகை ... என்னவொரு துல்லியம்...!
இயமப் பிறழ்வுகளில் நியமப் புணர்வுகள் .... சொல்லெடுத்து ஆடும் சிலம்பம் வெகு இலாவகம் வினோ!
பின்னொரு நாட்களில் நாம் நினைவு கூறும் கவிதைகளில் சாட்சியமாக நீங்களும்., நானும் ...
என் இனிக்க நினைக்கும் தோழனே...! வணக்கம். உங்கள் ஆழம் + அனுபவம் = அழகு. கவிதைப் புனையும் கரங்களுக்கும்... எனது நன்றிகள் உரித்தாகுக. நண்பா... சிறு விண்ணப்பம்....
# ஒரு மழை துளி - சிந்திய
துகள்களின் முகைகளில்
அவள் -
இதில் முகை என்கிற வார்த்தையை எந்த பொருளில் கையாளுகிறீர்கள்.
முரசு கொட்டி
# மூப் பணிரெண்டு பௌர்ணமிகளில்...
இந்த வரிகளில்....
முப் பணிரெண்டு என வந்தால் சரியென நினைக்கிறேன்.
# யாழின் அரகேற்றங்கள்...
இதில் ...
அரங்கேற்றம் என வரவேண்டும்.
தவறாக எண்ண வேண்டும்.
சொல்லத் தோன்றியதால்...
சொல்லி விட்டேன்.
மிக்க நன்றி.
நன்றி இராமசாமி கண்ணன்...
நன்றி அன்பரசன்
நன்றி சக்தி...
நன்றி ராஜா
நன்றி தினேஷ்...
நன்றி Sriakila
நன்றி ரியாஸ்..
நன்றிங்க சீமான்கனி
நன்றிங்க நிலா மகள்...
ஆம் கே ஆர் பி அண்ணா...
மாற்றி விட்டேன் தமிழ்க் காதலன்... மிக்க நன்றி..
அருமையானப் பதிவு நண்பரே
நன்றி யாதவன்...
மொழி செம்மையாகி வருகிறது ..வாழ்த்துக்கள்..வினோ
நன்றி தேன் அக்கா...
Post a Comment