12 Oct 2010

இதுவும் கடந்து போகும்...!



யன்னலில் கசியும் கருமையின்
பிறப்புக்கும் இறப்புக்குமிடையில் - என்
செவிப்பாறை சிதற
துகள்களை இரைத்துக் கொண்டிருக்கும்
அழைபேசி அவலங்களில்
நெஞ்சாங்கூடு அறுபட்ட
தொட்டா சிணுங்கி புழு
சுருண்டிருந்த  பொழுதொன்றில்
நான்
இறந்து போயிருந்தேன்...!

பெரியதோ சிறியதோ   - அறியா
நீளக் குடலுக்குள்
கழுகின் நகக்கங்குகளில் வதைப்பட்டு
கிழியும் நினைவுச் சிறகுகள்
நெளிந்து கடந்து
வளி வழி விரிய
அந்திமங்கள் இரண்டான தருணங்களில்
நான் இறந்து போயிருந்தேன்...!

அன்னக் குழாய்கள் சிதைக்கப்பட
விழி நாணல்கள் - யமியை
கதாநாயகி யாக்கிய கனாக்களை
உமிழ்த்துக் கொண்டிருக்கையில்
மரத்த மதி உரைக்கிறது
இதுவும் கடந்து போகும்...!

-------------------------------------------------------------------------------------
நான் இறந்து போயிருந்தேன் -  கவிதை போட்டிக்காக எழுதியது...


35 comments:

வருணன் said...

மறுவாசிப்பிற்கு தூண்டும் வார்த்தை சரங்கள்.நன்று.

சில ஐயங்கள். யன்னல், யமி எனும் வார்த்தைகளின் அர்த்தம் என்ன நண்பா?
மற்றும் அது ‘அலைபேசி’ தானெ அழைபேசியா?

கவி அழகன் said...

பொறுங்க சார் நான் ஓடிபோய் தமிழ் அகராதி வாங்கிட்ட்டு வாறன்
என்ன வார்த்தைகள் ஒவ்வொன்ன்றும் பட்டை தீட்டிய தமிழ்

நான் இருந்து போயிருந்தேன்...!
நான் இறந்து போயிருந்தேன்...!

sakthi said...

இதுவும் கடந்து போகும் வினோ!!!

சிவாஜி சங்கர் said...

கடந்துபோம்....! :)

Chitra said...

புரிந்த மாதிரியும் இருக்கிறது. சில வார்த்தைகள், புரியாத மாதிரியும் இருக்கிறது. ம்ம்ம்ம்....

செல்வா said...

எனக்கும் கொஞ்சம் புரிஞ்ச மாதிரியும் இருக்கு .,
புரியாத மாதிரியும் இருக்கு ..!! ஆனா படிக்கரக்கு இனிமையா இருக்கு அண்ணா ..

ஜெயந்த் கிருஷ்ணா said...

இதுவும் ஒரு நாள் கடந்து போகும்...

நண்பா எனக்கும் உனக்கும்.. ஆறுதல் சொல்லவும், அரவணைக்கவும் நல்ல நடப்புகள் கிடைத்த இந்த பதிவுலகத்திற்கு நன்றியை சொல்லிக் கொள்வோம்...

Unknown said...

கவிதை அற்புதம் .. உங்கள் கவிதைக்குள் நான் சிறிது நேரம் இறந்து போனேன் ...

Riyas said...

ரொம்ப அழகா இருக்கு கவதை..

எஸ்.கே said...

அருமை! நிச்சயம் இதுவும் கடந்து போகும்! அந்த நம்பிக்கை என்றென்றும் இருக்கட்டும்!

வினோ said...

@ வருணன் - மிக்க நன்றி நண்பரே..

யன்னல் - window
யமி - yaman's wife

அலைபேசி என்று தான் நினைக்கிறேன்.. தெளிவு படுத்துகிறேன்..

வினோ said...

நன்றி யாதவன்..

வினோ said...

ஆமா சக்தி.. அந்த நம்பிக்கை தான் வாழ்க்கை...

வினோ said...

நன்றி சிவாஜி...

வினோ said...

சித்ரா உங்களுக்கே புரியலையா?

வினோ said...

செல்வா நாளைக்கு பாடம் எடுக்கிறேன்..

வினோ said...

@ வெறும்பய - ஆமாம் நண்பா.... நட்பின் சுவாசங்கள் என்று உண்டு..

வினோ said...

@ கே ஆர் பி - அண்ணே, மீண்டு வருகிறேன்.. சந்திக்கிறேன்

வினோ said...

நன்றி ரியாஸ்..

வினோ said...

நன்றி எஸ் கே...

நிலாமகள் said...

நல்லா இருக்குங்க வினோ... யமனோட மனைவி பெயர் 'ஐயோ ' என்றல்லவா நினைத்திருந்தேன் ...?!

"ராஜா" said...

சத்தியமா புரியல நண்பரே ....

கயல் said...

மிகவும் அருமை நண்பரே!

அழகுத் தமிழ் வாசிக்கத்தந்தமைக்கு நன்றி!

தமிழ்க்காதலன் said...

கவிதையின் கனத்தில்
மறித்துக் கிடந்தது......
நான் மட்டுமல்ல...!!
என் கணங்களும்தான்.
வாழ்த்துக்கள் நண்பா..,
துவங்குங்கள்....
உங்கள் தனிமை
தவத்தை...!!
உதிரும் கவிதைப்
பூக்களுக்காய்....
காத்திருக்கிறான்...!
"கவிதைக் காதலன்".
நன்றி.

அன்பரசன் said...

அருமை நண்பரே

ஜெயசீலன் said...

தல! நல்லக் கவிதை...

வினோ said...

@ நிலா மகள் - நீங்கள் சொல்லுவது சரியே.. கவிதைக்கா மட்டுமே அந்த வார்த்தை...

வினோ said...

உங்கள் முயற்ச்சிக்கு நன்றி ராஜா...

வினோ said...

நன்றி கயல்...

வினோ said...

நன்றி தமிழ்க் காதலன்...

வினோ said...

நன்றி அன்பரசன்..

வினோ said...

நன்றி ஜெயசீலன்..

அன்புடன் மலிக்கா said...

//புரிந்த மாதிரியும் இருக்கிறது. சில வார்த்தைகள், புரியாத மாதிரியும் இருக்கிறது.//

என்றபோதிலும்
இதுவும் கடந்து போகும்.
கவிவரிக்குள் எதோ ஒன்று ஈர்ப்பைதருகிறது. வாழ்த்துக்கள் வினோ

வினோ said...

நன்றிங்க மலிக்கா..

"ராஜா" said...

//உங்கள் முயற்ச்சிக்கு நன்றி ராஜா...

அபாரம் ஒருவழியா மூச்சி தெனர தெனர படிச்சி அர்த்தம் புரிந்து கொண்டேன் வினோ ... மனதில் ஒரு வார்த்தைதான் தோன்றியது "எப்படி இப்படில்லாம் எழுத முடிகிறது" என்று... வாழ்த்துக்கள் நண்பா