26 Jun 2010

நாடோடி....

எங்கு தொடங்க? எப்படி தொடங்க?
நாடுகளுக்கு ஓடுவதால் (பிறந்தது) இந்த கதை!

எனக்கும் ஆசைதாங்க வேலை செய்யற இடத்திலிருந்து வெளிநாடு அனுப்புவாங்கனு :(

இல்லையே! 

வேற வழியில்லாம நானே வழி தேடிகிட்டேன். நாடுகள் பல போனேன்...
அப்பவும் வேலைக்கு இல்லைங்க.. சும்மா  ஊர் சுற்றிப்பார்க்க. 

இது இப்படியிருக்க, எல்லோருக்கும் நடக்குமே, அதுதாங்க கல்யாணம், எனக்கும்.... வருத்தம் தான் அப்ப‌. ஆனா, அழ‌கான‌ வ‌ர‌ம்.

வந்து சேர்ந்தாள் யாழ் இரண்டு வருடம் கழிச்சு.

யாழ் யாருன்னு சொல்லலையே? அவுங்க தாங்க இந்த கதையோட நாயகி....!

இப்போ எல்லோருக்கும் என்ன வேணும்? அத தேடணுமே!.....அதே தாங்க
காசு...காசு வேணுமே.
ஓடு..எங்காவது நாலு காசுக்கு வழியிருக்கா? அங்க ஓடு..அதன் விளைவு. பல ஆயிரம் மைல்கள், நாடுகள் தாண்டி நம்ம ஊருக்கு வட மேற்கு திசையிலே, நம்ம ஆளுங்க ரொம்ப குறைச்சலா இருக்குற Belfast ல புகுந்திருக்கிறேன்.

இப்போ கதைக்கு வருவோம்!..
அடப்பாவி  இன்னும் கதைக்கே வரலையான்னு நீங்க என்னை முறைக்கிறது புரியுது / தெரியுது.. நம்ம பொழப்பே இதுதாங்க - பேசறது! அதுதான் இத்தனை பில்டப்பு!

உணவு, உணவுக்கு வழி செய்யிற தொழில், தூக்கம்.... இது போக என்ன செய்ய?... யோசிச்சா
அடடா நம்மளும் படிக்கலாமே, எழுதலாமே, எழுதினதை பதிவு பண்ணலாமேன்னு...

என்ன‌ என்ன‌ எழுத‌? எப்ப‌டி எழுத‌? தெரியலையே....
ச‌ரி.. நாலு ந‌ல்ல வ‌லைப‌திவுக‌‌ள் போயி எப்ப‌டியிருக்கு, என்ன‌ இருக்குன்னு மூக்கை நுழைச்சு பார்த்தா, காலுக்கு கீழே உல‌க‌ம் ந‌ழுவுது!


மனதை உருக்கும் நிலாரசிகன், உள்ளத்தை அழகாய் அரவணைக்கிற பா.ரா அண்ணே, தன் கவிதை சிறகுகளால் உயர பறக்கும் சிவாஜி, க‌ல‌க்குற செல்வேந்திர‌ன் , எழுத்துகளால் புரட்டிபோடும் விக்கி, இது மாதிரியே நிறைய‌ ப‌திவுக‌ள்.

எழுதிய‌, எழுத‌ நினைத்த‌ எதுவும் ப‌திவு பண்ண த‌குதியே இல்லையினு புரிஞ்சுது :(

நாங்க விடுவோமா?

திரும்ப‌ திரும்ப‌ முய‌ற்சி செய்ய‌..கொஞ்ச‌ம் ந‌ம்பிக்கை...சில‌ அற்புத ந‌ட்புக‌ள்.
முக்கிய‌மா ஒருத்தர் - த‌ன் சிற‌குக‌ளில் த‌மிழ் வானில் ப‌ற‌க்கும் அருமை தோழ‌ர் - சிவாஜி!

அவ‌ர் கொடுத்த‌ ஊக்க‌த்திலும் என்னுள் எரிந்துகொண்டிருந்த‌ ஆர்வ‌த்தீயும் ச‌ட்டுனு வேர் விட‌.. இதோ - இங்க‌, இப்ப‌ உங்க‌ முன்னாடி.....

ஒரு நாடோடி!   மொக்க ஆரம்பம்.....

பி.கு : 
யாழ் எப்ப‌டி இதுல‌ நாய‌கி?
இந்த‌ க‌தைக்கும் வலைப‌திவுக்கும் தொட‌ர்பு இருக்கா?

7 comments:

Uday said...

நாட்டை ஆண்ட பல பேர் நாடோடிகள் தான் மாப்பு ...வரலாறு அவர்களை நாடோடின்னு சொல்லல ... வீரர்கள் ...வேந்தர்கள் . ...மக்கள் மீது பாசம் கொண்ட பண்பாளர்கள் ...சிந்தனையாளர்கள் ...அர வழி நடந்த அன்பானவர்கல்னு ... தலை மீது வைத்து கொண்டு பாராட்டி மகிழ்தது ... அந்நாட்கள் வெக்ஹு தூரம் இல்லை உனக்கு ...அன்பு வாழ்த்துக்கள் - உதயா

vinu said...

vaazthukkal vaarungal bloggergal ulagathirruku

சிவாஜி சங்கர் said...

இனி பல பரிணாமங்களில் பரிணாமிக்க வாழ்த்துக்கள்.. :)

Madi said...

Madhi said...
vanakkam mapla. nanna irruku. don't worry about went to abroad. Now a days thousands of miles is not a matter. This is a chance to develop your carriers (wealth & knowledge). melum melum indha nilavin madiyil valara, chiraka matravarkal manadhil pasumarathu aaniyaii pathindhu irruka en vaazhukkal.

வினோ said...

நன்றி @ உதய், வினு, சிவாஜி, மதி.....

cheena (சீனா) said...

அன்பின் வினோத் நிலா

நாடோடி வாயாடி கரடி

நல்ல துவக்கம்

நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

வினோ said...

நன்றி @ cheena (சீனா)