பாவாடை தாவணி புகைப்படம்
பூப்பெய்த நொடி வெட்கம்
சட்டென திருப்பும் ஓரப்பார்வை
கூந்தல் நகர்த்தும் பிஞ்சு விரல்
வெள்ளை உடை புன்னகை
தோள் சாயும் நட்பு
கரம் அழுத்தும் மெல்லிய அச்சம்
எதிர்பாரா இதழ் பதிப்புகள்
நெற்றி முகர்க்க வளரும் பாசம்
முடி கலைக்க வழியும் காதல்
காலைநேர விழிவிரியாமுன் முத்தம்
முகம் புதைக்கும் கண்ணீர்
இப்படியாக
எனை கரைத்துக்கொண்டிருக்கிறேன்
உருகி வடியும் நினைவுகளாய்
எதிர்கால ஓவியத்தில்
நீயோ
கடந்துபோகிறாய்
மறந்துபோகிறேன் - திரும்புகையில்
மறைந்துபோகிறாய்
நீ உதிர்த்துவிட்டு போன
பனித்துளி இதழ்விரிப்புகளில்
பாவிமனம் கரையுதடி
என்றோ தொடங்கிய
மோக ஆட்டங்கள்
தனித்திருந்த பொழுதுகளில்
சுருதியில்லா முகாரி கசிந்துக்கொண்டிருக்கிறது
இதயக் கூட்டில்
என் மௌன யுத்தத்திற்கு
தீனி போட்டுக்கொண்டிருக்கின்றன
புணைதலில் தப்பித்த
காற்றலைகளின் கதைகள்
செதுக்கிப்போட்ட பிரிய ஓலைகள்
தூது அனுப்பிய கூண்டுக்கிளி
காலந்தவறா குறிஞ்சிப் பூக்கள்
கைமறந்த மூக்கு கண்ணாடி
வழித்துணையாய் கைத்தடி
உயிர்நீத்து உதிரும் ரோமம்
அடி போனது போகட்டும்
நம் நிழலுடன் உரவாடிக்கொண்டிருக்கிறேன்
என்றாவது ஒருநாள் நீ வருவாய் எனத் தெரியும்!
6 comments:
கவிதை நல்லாயிருக்கு வினோ.
கவிதை நல்லாயிருக்கு ..
Please remove Word verification..
@ அம்பிகா - நன்றி தோழி...
@ வெறும்பய - நன்றி வணக்கம் அண்ணே... removed it :)
ரொம்ப நல்லா இருக்கு நண்பரே...
நல்ல வரிகள். இரசித்தேன்.
@ கமலேஷ், சந்ரு...
நன்றிகள் பல..
Post a Comment